தமிழ் startup

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பொறியாலர்கள் கல்லூரி முடிக்கின்றனர்.

அனைவருக்கும் வேலை என்பது சற்று கடிணமான அல்ல பெரிய கடிணமான விசயமே…

தமிழர்கள் அனைவருமே தொழில்நுட்பத்தில் சிறந்தவர்களே…இக்கூற்றிற்காக citation needed கோர வேண்டாம்…

அப்துல் கலாம் என அ முதல் சுந்தர் பிச்சை வரை அனைவருமே தத்தமது திறமைகளை உலகிற்கு போதுமான அளவிற்கு அதிகமாகவே நிறூபித்துவிட்டனர்..

இன்று கல்லூரி முதல்வர்கள் ஆரம்பித்து பலரும் தமிழ் பொறியியல் மாணவர்களை அவர்களில் பெரும்பாலோர் வேலைக்கு தகுதியற்றவர்கள் என்று முத்திரை குத்துகின்றனர்…

அது முற்றிலும் உண்மையல்ல..

தமிழ் மாணவர்கள் மற்றும் பொறியாலர்களில் பலர் உண்மையில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் அல்லது ஒதுக்கப்பட்டவர்கள்.

வாய்ப்பு கொடுக்கப்படும் பட்சத்தில் அவர்களால் திறமையாக தங்களை நிலை நிறுத்திக்கொள்ள இயலும்.

இன்று இந்திய கல்விக்கான ஆண்டு பொருளாதார ஒதுக்கீடே முப்பதாயிரம் கோடியே ஆகும்.

இவ்வளவை வைத்துக்கொண்டு ஆரம்பக்கல்வி

நடுநிலை

மேல்நிலை

பட்டயம்

பட்டம்

பட்ட மேற்படிப்பு

முனைவ படிப்பு என எல்லா நிலைகளிலும் உள்ள மாணவர்களின் அடிப்படை தேவைகளுக்கு ஒதுக்கவே போதுமானதாக இல்லை, இவ்வாறிருக்க மாணவர்களை தங்களது படிப்பை செயல்முறையில் நிகழ்த்த உதவும் (project)திட்டங்களுக்கு என நிதியை ஒதுக்குவதே கிடையாது…

அப்படியே ஒதுக்கும் பட்சத்தில் அத்தகைய ஊக்கத்தொகைகள் தமிழ்நாட்டை அடைவது மிகவும் அரிதானதாகவே உள்ளது.

மைய மாநில அரசுகள் பெறும் தொகையை இரானுவ தளவாட வாங்குதலுக்கே ஒதுக்குகின்றன.ஏனெனில் அத்தகைய பரிவர்த்தனைகளில் சதவிகித லாபத்தை அடைகின்றனர் அரசியலார்.

இத்தகைய நிலையில் தமிழ் மாணவர்கள் பலர் குறைவான ஊதியத்திற்கு பொருந்தா வேலைகளுக்கு செல்ல வேண்டிய நிலையில் தத்தமது கணவை விட்டுவிடுகின்றனர்.

இதனை பயன் படுத்திக்கொண்டு வட இந்தியா சார்ந்த ஊடகங்களும் சில தமிழ் பொறியாலர்கள் ஏதோ உதவாக்கறை போன்றும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கில் உதவாக்கறைகளை தமிழகம் மட்டுமே  உறுவாக்கி  வருவதை போன்று எழுதுகின்றன.

இத்தகைய சூழலில் தமிழ் மாணவர்கள் வேலையை உருவாக்கும் நிறுவன ஆரம்பிப்புகளை (startup company) நிகழ்த்த வேண்டும்.

ஏனெனில் ஒரு ரகசியம் சொல்கிறேன் கேளுங்கள்… இந்தியாவில்  உள்ள ஒவ்வொரு நிறுவனங்களும் கிட்டத்தட்ட 37 மடங்காக 2025 ஆம் ஆண்டுக்குள் அடைய உள்ளது..அந்த அளவிற்கு இந்தியா மீது உலகம் நிதியை முதலிட உள்ளது..

இன்று ஆரம்பிக்கும் உங்களது நிறுவனமும் அதில் ஒன்றாக ஏன் இருக்கக்கூடாது.

தமிழ் மாணவர்கள் பொருந்தா வேலைகளில் இருப்பது ஒன்றும் இலிவல்ல ஆனால் எக்காரணத்துக்கும் உங்களுடைய கணவை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டாம்.

ஒரு முறைக்காக உங்கள் கணவுக்காக கதவை தட்டித்தான் பாருங்கள்…

கண்டிப்பாக திறக்காது..

எட்டி உதையுங்கள்…

உங்களை வரவேற்கும்..
புதுமை நிகழ்த்த மூலதனம் அவசியமே…

ஆனால் மூலதனம் மட்டுமே புது நிறுவனங்களுக்கு எல்லாமும் ஆகிவிடாது..

உங்களுடைய கணவு நிறுவனத்தில் மூன்று வகை தொழிலாளர்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

கணவாளி( visionary)

பிரிப்பாளி ( hacker)

பேச்சாளி (chatter/promoter) 

நாளை உலகம் தமிழர்க்கே…
என்றும் உறுதியுடன்

____________________

சிபி என்கிற செம்பியன்.

ஒரு வாக்காளனின் கணவு…

கணினி இல்லாத காலத்தில் மக்களின் விருப்பங்களை ஆவனப்படுத்தவே கொண்டுவரப்பட்டது தேர்தல் மற்றும் தேர்தல் ஆணையம்.
இன்றைய அளவில் தொழில்நுட்பம் நீக்கமற எங்கும் தனது ஆதிக்கத்தை அகன்று பெறுகி செலுத்துகிறது.
மாறிவரும் கால சூழலுக்கு ஏற்ப பல புதிய வசதிகள் நம்முடைய வாழ்க்கையில் புழங்க தொடங்கிவிட்டது.
ஆனால் இன்றும் பல்வேறு அரசு சார்ந்த துறைகளில் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற மாற்றங்களை செய்யும் நேரம் வந்து விட்டது.
1.தேர்தல் ஆணையம் தன்னுடை தேர்தல் நடைமுறைகளை கலைந்துவிட்டு பேஸ்புக் போன்ற சமூக இனைய தளங்களை போன்று கட்டமைக்க வேண்டும்.இவற்றில் ஓட்டு போடுதல் முதல் ஓட்டுக்களை எண்ணுதல் வரை அனைத்துமே தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வர வேண்டும்.
ஓட்டு போட்டு நாடாளுமன்ற சட்டமன்ற உருப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறைமையை கலைந்துவிட்டு உறுப்பினர்களை மக்களே தத்தம் தொகுதிகளில் செய்த தன்னார்வ தொன்டுகளின் அடிப்படையில் அவற்றுக்கு மக்களே கொடுக்கும் வகையிலும் அதில் அதிக லைக்குகளை பெறும் நபரை மட்டுமே நாடாளுமன்ற சட்ட மன்ற உறுப்பினராக போட்டியிட தகுதியுடையவராக அறிவிக்க செய்ய வேண்டும்.
இதன்மூலம் முன்னமே சமூக தொண்டு ஆற்றாமல் வாரிசு அடிப்படையில் பதவிகளை பெறுவது தவிர்க்க இயலும்.
அப்படி சமூக தொண்டு ஆற்றி பதவிக்கு வந்தவர்கள் தப்பு செய்யும் பட்சத்தில் அவர்களது அக்கவுன்டை நிரந்தரமாக முடக்க வேண்டும்.
நாடாளுமன்ற சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இணைய வழி மக்களுக்காக ஒதுக்க வேண்டும்.
உதாரனத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தவறு அல்லது மக்களுடைய விருப்பத்துக்கு எதிராக செயல்படும்  பட்சத்தில் அவர்களுக்கு இணைய வழி ஓட்டுக்கள் மூலம் மக்கள் தங்கள் எதிர்ப்பை நாடாளுமன்ற சட்ட மன்றங்களில் பதிவு செய்ய முடியும்.
அரசியல் வாதிகள் செய்யும் சிரிய செலவு முதல் பெரிய செலவு வரை அனைத்து மக்களுக்கும் இலவசமாக தெரியப்படுத்தப்பட வேண்டும்.
கணக்கில் வராது அரசியல்வாதிகள் பன பரிவர்தனைகளை செய்யும் பட்சத்தில் அவர்களின் சொத்துக்களை பொதுவுடமையாக்க வேண்டும்.
அனைத்து மொழிகளையும் தேசிய மொழிகளாக இந்தியா அறிவிக்க வேண்டும்.இன்றைய தொழில்நுட்ப உலகில் மொழிப்பெயர்ப்பை உடனடியாக செய்ய இயலும்.இத்தகைய (Real time language translation system ) உடனடி மொழிபெயர்ப்பிகள் மூலம் எந்த ஒரு மொழியிலிருந்தும் மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்ய இயலுமாதலால் இனியும் தொழில்நுட்ப வளர்ச்சியின்மை என்ற பழைய காரணத்தை காட்டி அனைத்து மொழிகளையும் தேசிய மொழியாக அறிவிப்பதை இனியும் அரசுகள் தள்ளிப்போடக்கூடாது.
இரானுவ தளவாடங்களுக்காக செலவு செய்யும் பெறும் தொகையை தகுதியும் திறமையும் வாய்ந்த தொழிற்கல்வி மாணவர்களுக்கு Project என்னும் செயல்திட்ட பணிகளுக்காக ஒதுக்க வேண்டும்.
இதன் மூலம் மாணவர்களுக்கு கோடிக்கணக்கில் தன்னுடைய கணவு திட்டங்களை செயல்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.மேலும் பல மாணாக்கர் தொழில் முனைவோராக மாறும் வாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கும் மேலும் புதிய புதிய தொழுல்நுட்பங்கள் இதன் மூலம் மாணவர்களால் இரானுவத்திற்கு கிட்டும்.
கல்விக்காக மிகவும் சொற்பத்தொகையே ஒதுக்கப்படுகிறது,இதை தவிர்க்கப்பட வேண்டும்.நாட்டில் கல்வி,மருத்துவம் இரண்டும் கட்டாய இலவசங்களாக்கப்பட வேண்டும்.
இப்படிப்பட்ட ஒரு இந்தியாவில் வறுமையோ,இயலாமையோ , வேலையின்மையோ கண்டிப்பாக இருக்காது.
__________________________
இப்படிக்கு..
திருவாளர் பொதுசனம்.

காவேரி ஊஊ

என்னடா இது அப்டி இப்டின்னு ஒரு வழியா காவேரி நம்ம தமிழ்நாட்டுக்கு வந்துடும்னு பாத்தா…
கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் உச்சி மன்றத்துக்கும் இடையில நடக்குற விசயங்கள பாத்தா ..
சரவனன் மீனாட்சி தொடர விட ஒரேயடியா நீளமா ஓடிக்கிட்டே இருக்கும் போல …

இந்த பக்கம் தன்னிய குடுன்னு உச்சி மன்றம் கவாவுக்கு சொல்லுது…
அதுக்கு கவா முடியாது …எங்களுக்கு குடிக்கவே தன்னி இல்ல அப்புறம் எங்க தமிழ்நாட்டுக்கு கொடுக்க முடியும்னு சொல்ல…
மறுபடியும் கோலெடுத்து உச்சி மன்றம் ஒழுங்கா தண்ணிய தொறந்தூட்றுன்னு கண்டிக்க…
மறுபடியும் நாங்க அதுக்கு சித்தமில்லைன்னு சித்தராமைய்யா சொல்ல…
இப்டி வீராப்பா தனியா சொன்னா ஊரு ஒலகம் நம்பாதுன்னு வாட்டாளு எதிராளு நாட்டாளுன்னு எல்லா ஆளையும் கூப்டு
ஆடு இல்ல ஆடு காணாவும் போகலன்னு நம்ம சிவாஞியவே மிஞ்சிவிட்டது கவா..
இதுக்கிடையே உலகம் பூறா சுத்திக்கிட்டு அப்பப்ப இந்தியாவுக்கும் சுற்றுப்பயனம் வருவாரே அதாம்பா நம்ம பிரதமறு…
காவேரின்னு நம்ம தமிழ் மக்கள் வாய தொரந்தாவே …
சுவச்பாரத்…
டெரிஷ்டு
பாக்
பலூச்சின்னு என்னன்னமோ ரீல் விட்டு பாத்தாறு …அதையும் மீறி உச்சி மன்றம் தலையிட்டு…
மத்தியஅரசை பார்த்து
இவ்வளவு அமளி துமளியிலும் யாருப்பா அது மிச்சர் சாப்பிட்றதுன்னு கேட்க…மிச்சர வாயில மேலும் மிச்சிக்கிட்டு இருந்தது…

இதுக்கிடையில உச்சி மன்றம் கூப்பிட்டு ஏம்பா தன்னிய துறந்தூட்டியான்னு கேட்க…
நம்ம கவாவோ …வடிவேலு பானில..
என்ன தன்னிய துறந்துட்டியான்னு திரும்ப திரும்ப கேட்க..
ஒரு அளவில் எச்சரிக்கை கொடுத்து கொடுத்து…முடிவில் மறுபடியும் கோர்டு பக்கம் வா  ஒன்னு வச்சு செய்றன்னு சொல்ல…

உலகம்பூறா சுத்தி வருவாறே ஒருத்தர் அவர்ட கூப்டு காவேரி எங்க இருக்குன்னு கேட்டா ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் இருக்குன்னு ஒருவழியா தப்பிச்சோம் பொழச்சோம்னு பாக்கிஸ்தானுக்கு போற தன்னிய தடுக்கலாம்னு சொல்லி ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்க பாத்தாரு…ஆனா சைனாக்காரன் அனையவே கட்டி முடிச்சுட்டான்…
அது வேலைக்கு ஆகாதுன்னுட்டு கூட்டிக்கழிச்சு ஒருவழியா…தமிழ்நாட்டுக்காரங்கனால என்ன பிரயோசனம்…கவா காரனாவது ஓட்டு போடுவான்…யோசிச்சு
உச்சி மன்றத்துக்கிட்ட …
இந்தாருங்க சார் நீங்க சொல்ற வேகத்துக்கெல்லாம் நதிநீர் ஆனையத்த ஆரம்பிக்க முடியாது..
சுற்றும் முற்றும் எல்லாரையும் கூப்டு எல்லாரையும் ஒத்துக்க வச்சு ஒருத்தனுக்கும் பிரச்சினையில்லன்னா நாங்க அப்புறமாதான் ஆனையத்த கூட்ட முடியும்னு…

முடியாதுங்குறத
பிப்ரவரி 30ம் தேதி வரும் நல்ல நாள் பார்த்து முடிச்சுவக்கிறதா கடைசியில நம்ம வையித்துல அடிக்கிறதுக்காவுது வாயை திறந்தது…மவுன அரசு…

இப்படிக்கு
தமிழன்

அருமையான தமிழ் பெயர்களை பதிக

தமிழில் சில தனித்தன்மையான பெயர்களை தேர்ந்தெடுத்து இங்கு வழங்கியுள்ளோம்,இலக்கியத்துவம் வாய்ந்த மற்றும் தஞ்சையை மையப்படுத்தும் விதமாகவும் அமையுமாறு மேலும் சில பெயர்களை பதியுமாறு வசவு விரும்பிகளை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

சிபி
சக்கரவர்த்தி
மவராசா
தமிழ்
கரிகாலன்
ராசேந்திரன்
ழனன்
கடாரம் கொண்டான்
ஓரி
தமிழ்கோன்
தங்கம்
மகிழன்
செம்பியன்
பெருவளத்தான்
அருன்மொழி
ஞாலன்
சிபின்
பொன்னம்பலம்
வல்வி
செந்தமிழ் வளவன்
வளவன்
இனியன்
தமிழினியன்
நடேசன்
சரசன்
பொன் சந்திரகுமார்
யாழன்
நிலவன்
கிள்ளி
வல்விலோரி
கோன்சோழன்
கோசோழா
நக்கீரன்
யாதுமூரன்

பெல்ட்

இன்னும் உனக்கு உண்மையான சுதந்திரம் கொடுக்கப்படவில்லை

இப்படிக்கு
உன் வயிற்றை இருக்கும் உன் பெல்ட்

தமிழர்கள் அறிவாளிகள்,வாழ்க்கையின் இனிமையை அதன் கொடுமையான வெம்மையிலும் வரவேற்க தெரிந்தவர்கள்.

ஆனால் உலகமயமாக்கலினால் பல்வேறு தீமைகள் விதிகளாக இன்றைய இளைய தலைமுறை மீது தெரிந்தே தினிக்கப்படுகிறது.

ஒரு இனம் அறிவு முதிர்ச்சி அடையவும் அணியும் ஆடைக்கும் எந்த சம்பந்தம் இல்லை.

மேற்கத்திய இறக்குமதிகளான குழாய்(pant),இருக்கி(belt) ஆகிய இரண்டும் இன்றைய தலைமுறைக்கு செய்யும் தீமையை வேறு எதுவும் செய்துவிட இயலாது.

பண்டைய வேட்டியிலிருந்து இன்றைய குழாய் துனிக்கு மாறியதே தவறு.சுத்தமாக காற்றோட்டம் போயே போச்சு.

ஒவ்வொரு பகுதியின் உடை வகைகளை அந்தந்த பகுதிகளின் சீதோசன நிலையே முடிவு செய்கிறது.

அப்படி இருக்கும்போது படிப்பை ஒரு காரணமாக கூறி வேட்டி அனியும் உரிமையை மறுத்து இன்றைய மாணவ சமூகத்தை தவறான,இருக்கமான ஒரு  சூழ்நிலைக்கு கொண்டு செல்கின்றன இன்றைய மேற்கத்தியம்,இதற்கு வழிவிட்டு அதை ஆட்சேபிக்க வேண்டிய அரசும் மற்றும் அறிவு சார் நிறுவனங்களும் வாய் மூடி மவுனியாக இருப்பத கவனிக்க தக்கது.

வெள்ளைக்காரர்கள் அறிமுக படுத்திய குழாய் வகை இருக்க ஆடைகள் அவர்களுக்கே தீம்பாய் இன்றைய காலங்களில் அதிக அளவிளான  வயிறு புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகும் நபர்களையுடைய நாடாக இங்கிலான்து மாறியுள்ளது.

குழாய் மற்றும் இருக்கி அணிவதால் வயிற்றுப்பகுதி இருக்கமடைகிறது பின்னர் இருக்க கோடுகள் உருவாகி வயிற்றை இரு பகுதியாக பிரித்துவிடுகிறது,நாளடைவில் வயிற்றில் மேல்பகுதியில் செரிமானத்திற்காக சுரக்கப்படும் அமிலமானது மேல்வயிற்று பகுதியில் தங்கிவிடுவதால் வயிறு புற்றுநோய்க்கு ஆளாகிறது.
அதுமட்டுமின்றி நாளாடைவில் உடல் உள்
உறுப்புகள் இருக்கத்தினால் ஒரு புறத்தில் இருந்து பிதுக்கி கொண்டு மறு புறத்தை அடைகிறது இதுவே இன்று முதியவர்களின் பிரச்சினையான ஹெர்னியா ஆகும்.
ஆகவே மேற்கத்திய பொருளாதாரத்திற்கு மொத்த சந்தையாக மாற்றிய போதும் நமது பண்டைய அறிவுசார் உடையையாவது நாமே இனியேனும் தீர்மானிக்க முயலுவோமாக….
___________________________________
இப்படிக்கு

திரு.மவராசா

ஒரு இஸ்ரேலியரின் பார்வையில் நாம்…

நான் பலமுறை சிந்தனை பகிர்வு தளமான Quora பார்ப்பதுன்டு…
அங்கு நிறைய சுவையான கருத்துக்கள் பரிமாறப்படுவதுன்டு…

அப்படி ஒரு கோரா வலைத்தள பதிவரான அஹரோனி எனப்படும் இஸ்ரேலிய நாட்டவரின் கருத்து நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைத்தது…

உணவை பற்றியும் மத சகிப்புத்தன்மை பற்றியும் பெருமையாக பேசும் திரு.அஹரோனி மொழி பற்றி கூறும்போது கீழ்க்கண்டவாறு கூறுகிறார்…

It’s strange and sad to me that the native languages of India are not used more in communications, education, advertisement, government etc. More English makes it comfortable for tourists, of course, but you should feel more pride about your own languages. You should stop thinking that English is so important. From what I heard, all higher  education in India is in English, and it’s almost impossible to find a decent job without knowing this foreign language. My Indian friends are very surprised every time I tell them that we speak Hebrew at work, even in software companies, and that almost all of our schools and  universities are in Hebrew medium. Although we could do much better ourselves, India could still learn some things from us about respecting  the native language. Letting people use their languages more will  unleash India’s huge human and economic potential.

இதன் பின்னராவது…
தமிழ் வழி கல்வி தமிழ்நாட்டில் கட்டாயமாக்கப்படுமா…?

இப்படிக்கு

திரு.நாடோடி

இத கூட விட்டு வைக்கலையாடா….

ஜல்லிகட்டானது பல்லாயிரமாண்டாக நம் தமிழரிடையே நடைபெற்று வந்தது. ஆனால் இன்று ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனையே கடித்த கதையாக இதிலும் நமது ஜனநாயக கட்சிகள் அரசியல் பன்ன ஆரம்பித்து விட்டார்கள்.

நீதி என்பது என்றுமே ஒன்றாக மட்டுமே இருக்க இயலும்.

ஒரு முறை ஜல்லிக்கட்டு நடத்தலாம் என அறிவிக்கிறார்கள்
மறுமுறை அதே ஜல்லிக்கட்டை சட்ட விரோதம் என அறிவிக்கிறார்கள்.

இங்கே எதுதான்டா உறுதியான இறுதியான நீதி…

எல்லா விசயத்தையும் அதிகாரத்தில் இருப்பவர்கள் அவரவர்க்கு ஏற்றார்போல வளைத்தும் நெளித்தும் சட்டத்தை மனிதர்கள் மீது தினிக்கிறார்கள்.

இங்கு எல்லாமே அரசியல் தான்…

ஒரு பக்கம் நுணி நாக்கில் ஆங்கிலத்தையும் நிறைய வட மொழியையும் கொஞ்சம் தொட்டுக்கை என தமிழையும் கலக்கி பேசும் புது தமிழர்கள் (ஜல்லிக்கட்லே மாட்கள் பாதிக்கப்படுறது,மனுசால் சாக்றாள்,குதிக்கிறாள் என்று அவாள்ளாம் ஒரே அடியாக குதிக்கிறாள்(மன்னிக்கவும் :குதிக்கிறார்கள்).
இப்படி அவாளுடைய பேச்சை கேட்டு நம்மவாளான சில தமிழர்களும் அவாளுடைய அடியை ஒற்றி நடக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஏன்பா அப்புடீன்னா கேரளாவுளே அடிமாடாக தினமும் ஆயிரக்கணக்கான மாடுகளை குறிப்பாக காளைகளை அதுவும் நல்லா இருக்கும் காளைகளை அறுப்புக்காக கேரள எல்லையில் வேண்டுமென்றே காளைகளின் கால்களை மரக்கட்டைகளால் அடித்து நுடமாக்கி கணக்கு கான்பித்து கழுத்தறுக்கிறார்களே இதிலெல்லாம் உங்களுடைய விலங்கு நல அமைப்புகள் ஏன் கேட்க மாட்டேன் என்கிறார்கள்..

இப்படியே தமிழரின் பல்வேறு இன அடையாளங்களை வேண்டுமென்றே தடுத்து தடுத்து பலவற்றை நாம் இழந்துவிட்டோம்.

இன்னும் பொங்கல் விழா , சிலம்பம்,தாழாட்டு,காரவகை சுவை உணவுகள்,தமிழ் மறுத்துவம் ,தமிழர் திரு நாள் என ஒரு சில விடயங்களையே நாம் இன்னும் நம் கைகளிலே வைத்துள்ளோம்.

இப்பொழுது நமக்கு தேவை தமிழர் என்ற இன உணர்வே..

இப்படிக்கு ..

தெலுங்கன்

என்ன வாழ்க்கடா….

பிறந்தது முதல் உணவை தேடி …
உணவுக்காக பாசத்தை தேடி…
பாசத்திற்காக உறவை தேடி…
உறவுக்காக நடிப்பை தேடி…
நடிப்பிற்காக சிறிப்பை தேடி…
சிறிப்பின் பின் சிறுமையை தேடி…
சிறுமையினால் ஆறுதலை தேடி…
ஆறுதலுக்கென இல்லாலை தேடி…
இல்லாலுக்காக வீட்டை தேடி…
வீட்டுக்காக வங்கியை தேடி…
வங்கிக்காக கடனை தேடி…
கடனுக்காக வட்டியை தேடி….
வட்டிக்காக வருடத்தை தேடி…
வருடத்தினால் முதுமையை தேடி…
முதுமையினால் நோயை தேடி…
நோயினால் பின் மரணத்தை தேடி…

இப்படி வாழ்க்கை முழுமையும் தேடல் வாழ்க்கையை தவிற மற்ற அனைத்தை நோக்கியும் நகர்கிறது….

என்ன வாழ்க்கடா….

இப்படிக்கு…

திரு.உழளி

தமிழில் புது சங்கங்கள்…

தமிழில் பல புது வகை சங்கங்கள் தேவைப் படுகிறது….
அவை பழையன சேகரித்தல் புதியன புகுத்தல் என நூலகாக்கங்களை கொண்டும்…தற்காலத்திற்கு உகந்த வகையில் இணைய வகையை கொண்டதாகவும் இருத்தல் நலம்…

அத்தகைய தமிழ் வலைகள் சில
பற்றி இங்கு காணலாம்…

1)உங்களுக்கு தமிழ் மீது தனியாத பற்றா …? தமிழ் …தமிழ் ..என்று வெறும் கதறுவதோடு நில்லாமல் பல தமிழ் நூல்களை தேடி இலவசமாக படிக்க விறும்புகிறீர்களா…?
அப்படி படிக்க முனையும் போது பல பழைய நூல்களின் அர்த்தம் விலங்காமல் பாதியிலேயே விடுவதுதான் உங்களுக்கு எழக்கூடிய முதல் பிரச்சினை…எனவே பாடல்களுக்கான உரை இருக்கும் போது தமிழ் சுவையை உணர்வதில் உங்களுக்கு தடை ஏதும் இருக்காது…
அப்படி தமிழின் பல இலக்கியங்களை உரையுடன் இலவசமாக படிக்க சேவையாற்றும் ஒரு இணையமே
கீழ்க்கானும் இணையம்….

Www.tamilvu.org

2)தமிழின் கலம் கண்ட மற்றும் கலம் காணாத தமிழ் எழுத்தாளர்களின் பல வகை கதை,கவிதை மற்றும் வேறுபல படைப்புகளை படிக்க ஆசையா
இவைகளுக்கான ஒரு மீப்பெறு களஞ்சியம்தான் கீற்று தளம்…இவர் அவர் என எவரையும் விட்டு வைக்காது தமிழ் எழுத்தாளர் பல்லாயிர கணக்கானோரின் படைப்புகளின் குவியலே கீற்று இணையதளம்…

பல ஆக்கங்களை இலவசமாக பதிவிரக்கம் செய்ய இயலும்….
உங்களில் பலர் இத்தகைய தளங்களை வாசித்திருக்க கூடும்…

இணைய முகவரி…

Www.Keetru.com

3) எதை பத்தி பேசினாலும் அதைப்பற்றிய பொருளாதார பார்வையை பெற வேண்டுமானால் அத்தகைய விடயங்களை முதலில் என்ன என்று தெளிய வேண்டும்…சிலர் அரை குரையாக தெரிந்து கொண்டு தனக்கு புகட்டப்பட்டவாறு பேசி கொண்டிருப்பார்கள்…

உதாரணத்திற்கு …
கமல் உலக நாயகன் என்று படத்தில் தன்னை நோக்கிய பாடல்களை வைத்து பாடி ஆடும் போது…அதை பார்த்து கைதட்டி விசிலடிக்கும் ஒருவன் கமலின் நடிப்பு திறத்தை பற்றிய பேச்சு வரும் போது தன் சக நண்பனிடம் விவாதிக்கும் போது என்ன சொல்ல நேறும்…..

கமல் ஒரு உலக நாயகன் என்று எடுத்த எடுப்பிலேயே பட்டம் கொடுத்து விடுவார்…மறுபேச்சுக்கே இடம் இல்லை…ஆக கமலுக்கு இங்கு கொடுக்கப்பட்ட பட்டமானது கமலுடைய படம் கொடுத்ததா அல்லது அவர் ரசிகர் கொடுத்ததா என்பது சற்று சிந்திக்க வேண்டிய ஒன்று…

இங்கு தமிழிசையை புனரமைத்த இளையராசாக்களும் புத்தாக்கம் செய்த ரகுமான்களும் …

படத்திற்கான புது இலக்கனத்தை படைத்த பாரதிராசாக்களும்…பல்துறை நிபுனர் ராசேந்தரையும் இன்றளவில் பல ஊடகங்கள் நக்கலாக எழுத அதையே உண்மை என நம்பி தன் நன்பனிடம் சரி என வாதிடும் நவீன ரசிகர்கள் பலர் உள்ளனர்..

இவர்களை போல் அல்லாது பல வகையான சமூக, பொருளாதார மற்றும் உலகளாவிய பிரச்சினைகளை பற்றி நன்கு விளக்கி அவற்றுக்கான பொருளாதாரம் சார்ந்து சரி மற்றும் தவறுகளை ஏறக்குறைய எல்லா பிரச்சினைகளையும் புரட்சி ஒன்றையே தீர்வென வைத்து எழுதித்தள்ளும் மார்க்சிய லெனினிய என்று கூறும் ஒரு தளம்தான்….வினவு…

ஆனால் வினவு தளத்தை பொருத்தவரை ஒரு வரியல் சொல்ல வேண்டும் என்றால்…அவர்களிடம் உலகளாவிய பார்வைகளும் உலகளாவிய சிந்தனைகளும் உள்ளது…

இருந்தாலும் அவர்களின் ஒரே குறை என்று அதை படித்து தீவிர ரசிகராகி கைவிடும் பலரும் கூறுவது என்னவெனில் …

அவர்கள் ஒரு பிரச்சினையை குறித்து எழுதி பல வசவுகளை பதிவார்கள் …
அதை படிக்கும் வாசகர்களும் அதை முழுமையாக நம்பி எல்லாவற்றை பற்றியும் தெரிந்து கொதித்து எழுவார்கள்…

சரி அதே வேகத்தோடு ஒன்று சேறும் வினவர்களுக்கு வினவு தளம் கூறும் பதில் என்ன..?

வாங்க தோழர் புரட்சி செய்வோம்…
என்னைக்கு…? என்று கேட்டால் ..
பொறுங்க தோழர் கூடிய சீக்கிரம் புரட்சி வருது …இந்தா வரப்போவுது…கண்டிப்பா வந்துடும்னு ஆரூடம் கூட சொல்வார்கள்….
புரட்சி வராதுன்னு அவர்களுக்கும் தெரியும்…அதை படிக்கும் வினவர்களுக்கும் நன்றாக தெரியும்…
இருந்தாலும் நிறைய நம்மை சுற்றி நடப்பவைகளை தெரிந்துகொள்ள ஒரு நல்ல ஏடு என்றால் வினவை குறைத்து மதிப்பிட முடியாது…

இணைய முகவரி:
Www.vinavu.com

4)தமிழில் பல அரசுடமையாக்கப்பட்டுள்ள நூல்களை முதன் முதலில் மின்னாக்கம் செய்த பெறுமை புராஜெக்ட் மதுரை என்று அழைக்கப்பெறும் தமிழ்நாடு அரசு இணைய தளத்திற்குத்தான் சேறும்…

எல்லா நூல்களையும் பதிவிறக்கம் செய்யலாம் …
பெறும்பாலான ஆன்டிராய்டி அலை பேசிகளில் பதிவிரக்கி அந்த நூல்களை படிக்க இயலும்….

இணைய முகவரி:

Www.projectmadurai.org

இதைத்தவிர சவுக்கு போன்ற இணைய தளங்களும் உள்ளது….

உங்களிடம் இப்படி சிறந்த தளங்கள் வேறுசில இங்கு விடுபட்டிருந்தால் இங்கு குறிப்பிடலாம்….

இப்படிக்கு
______________________________________
வசவு….

பின்லாந்தின் கல்வி முறை

கடந்த இதழில் “போட்டியும் பொறாமையை போன்றி ஆபத்தே” என்று பார்த்தோம்  
அதே சிந்தனையுடன் வலைகளில் உலாவும் போது இத்தகைய மின்னிதழை காண நேர்ந்தது.
போட்டி,வியாபாரக்கல்வி,அரசாங்க கூட்டு,முதுகெலும்பொடிக்கப்பட்ட ஆசிரியர்கள் ,மந்தைகளாக ஆக்கப்பட்ட மாணவர்கள் என புறச்சூழல்களுக்கு மத்தியில் பின்லாந்தின் கல்விமுறை அப்படியே என்னை இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

இது குறித்த செய்தி
குமரிநாடு என்னும் இணையத்தில் படிக்க நேர்ந்தது…

வசவர்களுக்காக  இங்கு பகிறப்படுகிறது….

——————————————————————————————————————————–
அப்படி என்னதான்இருக்
கிறது பின்லாந்து கல்வி முறையில்? உலக
அளவில் ‘கல் வியின் உச்சம்’ படித்துப்
பாருங்கள்.
உலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என
அழைக்கப்படுவது பின்லாந்து். அமெரிக்க,
ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில்
எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும்,
அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான
டாலர் என்ற மந்திரித்த
தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால்
கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட
முடியவில்லை.
‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும்
மேம்பாட்டுக்கான அமைப்பு’ (OCED- organisation
for economic co-operation and development)
என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின்
கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள்
நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த
ஆய்வு அவ்வப்போது நடைபெறும்.
இதற்கு PISA-Programme for international students
assessment என்று பெயர்.
மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில்
சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வில் உலகின்
மற்ற நாடுகள் பின்வரிசையில் இருக்க…
பின்லாந்து எப்போதும்
முன்வரிசையிலேயே இடம் பிடிக்கிறது.
அப்படி என்னதான்
இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?
பின்லாந்தில் ஏழு வயதில்தான்
ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத்
தொடங்குகிறது. ஒன்றரை வயதில்
ப்ளே சுகூல், இரண்டரை வயதில் ப்ரீ-கே .சி.,
மூன்று வயதில் எல்.கே.சி., நான்கு வயதில்
யு.கே.சி என்ற சித்ரவதை அங்கே இல்லை.
கருவறையில் இருந்து வெளியில்
வந்ததுமே குடுகுடுவென
ஓடிச்சென்று பள்ளியில்
உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும்
அவர்களுக்கு இல்லை. எல்லா நேரமும்
கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும்
குழந்தையின் சின்னஞ்சிறு மூளை,
தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில்
இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும்
கற்கிறது. இலை உதிர்வதும்,
செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும்,
பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்.
இவற்றில்
இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள்
நடுவதால், அறிவு அதிவேக
வளர்ச்சி அடையும் என
எண்ணுவது மூடநம்பிக்கை.
ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும்
பின்லாந்து குழந்தை, அடுத்த
மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின்
பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம்
செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை.
ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும்
குறைவுதான். அந்த நேரத்திலும்கூட,
படிப்புக்குக் கொடுக்கப்படும்
அதே முக்கியத்துவம் இசை, ஓவியம்,
விளையாட்டு, மற்றும் ஆய கலைகள் ௬௪ (64)
க்கும் முக்கியத்துவம் உண்டு.
ஒவ்வொரு பள்ளியிலும் ஓர்
ஓய்வறை இருக்கும். படிக்கப்
பிடிக்கவில்லை அல்லது சோர்வாக
இருக்கிறது என்றால், மாணவர்கள்
அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்.
முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற
தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது;
பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம்
கையெழுத்து வாங்கி வரச் சொல்லும்
வன்முறை கிடையாது. தங்கள் பிள்ளையின்
கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள
வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால்,
தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப்
பெற்றுக்கொள்ளலாம்.
1. கற்றலில் போட்டி கிடையாது என்பதால்,
தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன
உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை.
2. சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக்
கருதும் மனப்பாங்கும் இல்லை.
3. இவர்களுக்கு வீட்டுப்பாடம்
தரப்படுவது இல்லை.
4. மாணவர்களுக்கு எந்தப் பாடம்
பிடிக்கிறதோ அதில்
இருந்து அவர்களே வீட்டுப்பாடம்
செய்து வரலாம்.
5. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர்
இருப்பார். அவர், மாணவர்களின்
உடல்நிலையை தனிப்பட்ட முறையில்
கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்.
6. ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள்
இருக்கலாம்; அதற்கு அதிக
எண்ணிக்கை கூடவே கூடாது.
7. முக்கியமாக பின்லாந்தில் தனியார்
பள்ளிக்கூடமே கிடையாது.
அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின்
வசம். கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர
வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக
இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும்
ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும். ‘என்
பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல
படிக்கிறா’ என சீன் போட முடியாது.
அனைவருக்கும் சம தரமுள்ள
கல்வி அங்கு உத்தரவாதப்படுத்தப்பட்டு உள்ளது.
அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம்
குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப்
பெற்றுவிடுகின்றனர்.
A. அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச்
செல்கின்றனர். ‘டியூஷன்’ என்ற அருவருப்பான
கலாசாரம், அந்த
நாட்டுக்கு அறிமுகமே இல்லை.
B. தேர்வுகளை அடிப்படையாகக்கொள்ளாத
இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும்
மாணவர்கள்தான், உலகளாவிய அளவில்
நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல்
இடங்களைப் பிடிக்கின்றனர்.
இது எப்படி என்பது கல்வியாளர்களுக்கே புரியாத
புதிர். அந்தப் புதிருக்கான விடையை,
ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது.
C. உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும்
குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை,
ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும்
வெளியிடுகிறது. இதில்
பின்லாந்து எப்போதும் முன்னணியில்
இருக்கிறது. மகிழ்ச்சியின் நறுமணத்தில்
திளைக்கும் குழந்தைகள்,
அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர்
எதுவும் இல்லை.
பின்லாந்து கல்விமுறையின் இத்தகைய
சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக,
உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும்,
பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக்
குவிகின்றனர். உலகின் 56 நாடுகளில்
இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர்
ஆண்டும் செல்கின்றனர். நாட்டின் அந்நியச்
செலாவணியில் கணிசமான சதவிகிதம்
கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது.
ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும்
புகழ்மாலைகளை பின்லாந்தின்
கல்வியாளர்களும் அமைச்சர்களும்
ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை.
‘பின்லாந்து கல்விமுறைதான் (Finnish Education
system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல
முடியாது. றிமிசிகி ஆய்வில்
எல்லா நாடுகளும் பங்கேற்காத நிலையில்
இப்படி ஒரு முடிவை வந்தடைய முடியாது.
எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க
முடியும்’ என்கிறார்கள். இல்லாத
நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து,
தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும்
தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில்
இது பண்புமிக்க பார்வை; மதிக்கத்தக்க
மனநிலை.
கல்வியில் இருந்து நாம் பெறவேண்டிய
சாராம்சம் இதுதான். இத்தகைய சிறந்த
கல்விமுறையை உருவாக்கியதிலும்,
பராமரிப்பதிலும் பின்லாந்தின்
ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.
சொல்லப்போனால்
பின்லாந்து ஆசிரியர்கள்தான்
இதற்கு முழுமுதல் காரணம். பின்லாந்தில்
ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எசு.,
ஐ.பி.எசு போல மிகுந்த சமூகக் கௌரவம்
உடையது. அரசின் கொள்கை வகுக்கும்
முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில்
ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.
மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு,
ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம்.
அதே நேரம் அங்கு ஆசிரியர்
ஆவது அத்தனை சுலபம் அல்ல!
மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும்
மாணவர்களில் இருந்து ஆசிரியர்
பயிற்சிக்கு மாணவர்கள்
தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள்
உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும்
பயிற்சி எடுக்க வேண்டும். பிறகு, ஆறு மாத
காலம் ராணுவப் பயிற்சி.
ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில்
நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி.
ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட்,
குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில்
பங்கேற்பது, நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த
தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம்
இருந்து சான்றிதழ், தீயணைப்பு, தற்காப்புப்
பயிற்சி, முதலுதவி செய்வதற்கான
மருத்துவச் சான்று… என ஆசிரியர்
பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச்
செலவிட வேண்டும்.
இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில்
பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத
முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும்
மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!
பாடம் படிப்போம் தாய்மொழி வழிக் கல்விப்
பயிலும் பின்லாந்து போராளிகளிடம்…
நன்றி
-சே.க. அருண் குமார் –
நன்றி
——-********—————————————-
குமரிநாடு மின்னிதழ்
( kumarinadu.net/index.php?option=com_content&view=article&id=7934:2015-01-04-07-59-58&catid=39:2009-09-10-17-48-24&Itemid=27)