பெருவெடிப்பு கொள்கை

பூமி சூரிய குடும்பத்தை சார்ந்தது

சூரிய குடும்பம் பால்வெளித்திரளை சார்ந்தது

பால் வெளித்திரள் அண்டத்தை சார்ந்தது

அண்டம் அண்டத்தொகுப்பை சார்ந்தது

இவ்வாறாக

இந்த சார்பு மேலும் கீழும் எல்லையற்றதாக உள்ளது.

இதில் நாமும் ஒரு தற்காலிக பொருட்களே…

ஏன் தற்காலிகம் என்கிறோம் எனில் நாம் அனைவரும் கால வெளி என்னும நீரோட்டத்தில் தோன்றி மறையும் மாயங்களே.

ஒரு மனிதன் பிறந்து தவழ்ந்து வளர்ந்து என இவை அனைத்துமே நான்காம் பரிமானமாக அறியப்படுகிறது.

பெருவெடிப்பானது அதிக அளவில் வெளி மற்றும் நிறை மேலும் காலத்தையும் உருவாக்கியதாக இக்கொள்கை கூறுகிறது.

இதன் ஒரு வடிவமாகவே cause and effect எனப்படும் செயல்-விளைவு கொள்கை உள்ளது.

பெரு வெடிப்பில் உள்ள அந்த கணம் அறிவியலால் இன்னும் உணரப்படவில்லை.

அதற்கு பெயர் தனிப்புள்ளி(singularity) என்று பெயர்.

அதற்கு வெகு அறுகாமையில் 10^-35 அதாவது 0.000000000……..1 என்று 35 பூச்சியம் அப்புறம் ஒன்று.

அவ்வளவு சிரிய ஒரு கால இடைவெளி வரை நெருங்கிவிட்டாரகள்.ஆனால் பூச்சியப்புள்ளியை இன்னும் நெருங்கவில்லை.

அப்புள்ளியை ஏன் நெருங்க இத்தனை ஆசை எனில் இதுவரை அறிவியல் எல்லா விடயங்களையும் கால வரையரையை தான்டி ஓரளவிற்கு விளக்க இயலும்.ஆனால் சிங்குளாரிட்டி எனப்படும் தனித்துவப்புள்ளியை தவிற அனைத்து புள்ளிகளிலும் நியூட்டன் விதியோ,ஐன்ஸடீன் விதியோ பொருந்தும்.ஆனால் இவ்விதிகள் யாவும் இந்த அண்டத்தின் ஆரம்ப புள்ளியில் பொருந்தாது.

ஏனெனில் அப்புள்ளியில் எந்த விதியினாலும் விடயங்களை வரையறுக்க இயலாது.
அப்புள்ளியை நெருங்கும்போது காலம் ,வெளி நிறை,ஆற்றல் இவையாவும் பூச்சிய நிலையை எட்டும்.
ஆற்றல் ஒரு கால கட்டத்தில் குறைய ஆரம்பிக்கும் போது அது உச்சத்தை எட்டும்போதும் அனைத்தும் சலனம் அற்று போகும்
அந்த நாளில் வெப்பநிலை பூச்சியத்தை நெருங்கும்.
இதைதான் இறுதிநாள் அல்லது “Doom’s day ” என்று கூறுவர்.

….
திரு.கணியன்

தமிழ்

தமிழ் மொழி தொன்மையான மொழியாக இருந்தாலும் அதை வருங்காலத்திற்கு ஏற்றவாறு இணைய திறனை அளித்தால் ஒழிய “தமிழ் தமிங்கிலிஸ் ஆகி மெல்ல மறைவதை தடுக்க இயலாது”.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டை விட குறைவான மக்களை கொண்ட ரசியா (அதாவது அன்றைய U.S.S.R)  அமெரிக்காவை தன் விரல் நுணியில் ஆட்டிப்படைத்தது.

அவர்கள் முன்னேரிய முழ முதல் காரணம் அவர்களின் மொழியை கைவிடாதது மட்டுமே.

இன்றளவில் நாம் பார்க்கும் பல இணைய இதழ்கள் ஆங்கில,ருசிய,எஸ்பொனல்,கொரிய ,சீன மொழிகளில் கிடைக்கின்றன.

அந்த வரிசையில் நம் தமிழ் மொழியும் தகுதி அற்றதா என்ன.?

லட்சக் கணக்கில் நம் தமிழ் நாட்டில் கணிணி பொறியாலர்கள் உருவாகினாலும் தத்தமது மொழி மீது பற்றுள்ள பொறியாலரும் சிலர் இருந்த போதும் விகிதாசார இடைவெளி நமக்கும் கீழை,மேழை நாடுகளுக்கும் குறைவாகவே உள்ளது.

கூகுள் தமிழ் மொழியை தனது மொழி பெயர்ப்பு பொறியில் இணைத்ததுதான் மிக முக்கியமான வளர்ச்சிப்புள்ளியாக நினைக்க வேண்டி உள்ளது.
2000 ஆண்டுகளாக தமிழை தட்டில் தாளாட்டியது முக்கியமல்ல இணைய வளர்ச்சிக்கு ஏற்ற மொழியாக மாற்றுவதே முக்கியம்.

ஒரு குழந்தை வளரும்போது பல மொழிகளை கற்றுக்கொண்டு தெளிவற்று இருப்பதை விட ஒரு மொழியிலேயே பயின்று அம்மொழியிலேயே துறை சார்ந்த அறிவினையும் பெற்று சாதிப்பது இனிது அள்ளவா?

இன்று தொழில் பிரிவில் பயிலும் பல மானாக்கர் தெளிவாக சிந்திக்கும் திறன் பெற்றிருந்தாலும் ஆங்கிலம் சிந்திக்கும் போது ஏற்படுத்தும் குழப்பத்தினால் தேர்வுகளில் எவ்வாறு வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தத்தமது விடைத்தாளில் உளறுகிறார்கள்.

இங்குதான் அவர்களின் மொழி சுதந்திரம் மறுக்கப்படுகிறது.உலகமயமாக்கல் கொள்கையை ஆங்கில மொழியால் ஒற்றி ஒற்றி எடுக்கிறார்கள்.

தமிழில் பொறியியல் அருமையான திட்டம் சார் என்று பேசினால் என்னை ஒரு மார்கமாக பார்த்தார்கள்…இவன் யாருடா எந்த உலகத்தை சார்ந்த ஜீவராசி என்பதைபோல.

இதற்கு இடையில் தமிழில் பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்கிற புறளி வேறு…

ஒருவனுக்கு வேலை கிடைப்பது என்பது அவன் எவ்வளவு தூரம் தொழில்சாலையின் லாப நோக்கிற்கு உகந்தவன் என்பதை பொருத்ததே தவிர வேரில்லை….

பல பெற்றோரும் உணர வேண்டியது…

தமிழிலிலேயே ஆரம்பப் பள்ளி,
தமிழிலிலேயே மேல்நிலைப்பள்ளி,
தமிழிலிலேயே தொழிற்கல்வி

…அடுத்த தலைமுறையாவது …
பெற உறுதியேற்போம்.

இப்படிக்கு
திரு.ஆடல்வல்லான்

தமிழ் இணையதளம் 2

தீர்வுகள்

1)உங்களுக்கான இணைய முகவரியை முதலில் பதிய வேண்டும்.
பெரும்பாலும் இந்த முகவரிகளை நீங்கள் குத்தகைக்குத்தான் பெர முடியும்(1ஆண்டு) ,காலம் முடியும் பொழுது நீங்கள் புதுப்பித்து கொள்ளலாம்.

ஆனால் சில முகவர்கள் இலவசமாகவும் தருகிரார்கள்(எ.கா: .tk).ஆனால் அவை அவ்வளவாக மதிப்புறுவதில்லை

சராசரியாக ரூ.500-600 வரை ஒரு வருடத்திற்கு  செலவாகும்.

2)அடுத்து 24/7 இணையத்திலேயே இணைந்திருக்கும் ஒரு கணிணி நமக்கு தேவை. அத்தகைய கணிணி மற்ற பல்லாயிரம் கணிணிகளுக்கு உங்களுடைய இணைய இதழ்களை தரும் வல்லமை பொருந்திய ஒன்றாக இருக்க வேண்டும்.ஆகவே அதன் பெயர் (web server or hosting server) “இணைய வழங்கி” என்று அழைக்கப்படுகிறது.
ஒரு இணைய வழங்கியை வாங்கி அதற்கு 24/7 இணைய இணைப்பை கொடுக்கலாம்.
அல்லது
அதையும் குத்தகைக்கு பெறலாம்.
ஒரு வருடத்திற்கு சராசரியாக ரூ. 2000 முதல் ரூ 4000 வரை செலவு பிடிக்கும்.

3)இணைய இதழ் வடிவமைப்பு

உங்களுடைய இணைய இதழை வடிவமைப்பதுதான் உங்களுடைய மிக முக்கியமான வேலையாகும்.
பெரிய அளவில் திறன் கொண்ட இதழ்களை ( dynamic web pages )
என்று கூரலாம்.
பெரிய அளவில் மாற்றங்களை கொள்ளும் திறனில்லாத இணைய இதழ்களை (static  webpages) என்று கூறுவர்.

ஆனால் இன்றளவில் வேர்டுபிரஸ் ,ஞூம்லா,த்ரூபால் போன்ற இலவச இணைய உயர் திறன் இதழ்களும் கிடைக்கின்றன.
அவைகளை சற்று எளிதில் முயன்று உங்களுக்கு ஏற்றவாறு தகவமைக்கலாம்.

—————————————-
இங்குதான் மிக முக்கியமான பிரச்சினை எழும்.

உங்களுடைய வேர்டுபரஸ் மென் பொருள் நீங்கள் எழுதும் தமிழ் எழுத்துக்களை ஒரு தரவுதளம் (database) ஒன்றில் சேமிக்கும்.

அதனை சேமிக்கும் வகைபாடை (database collation) என்று கூறுவர்.
இங்கு உள்ள பிரச்சினை என்னவெனில் இது இயல்பாகவே Latin_general_Ci என்று இருக்கும்.இது ஆங்கில -லத்தீன எழுத்துறுக்களை மட்டுமே ஏற்கும் தமிழை ஏற்காது.அதன் விளைவாக உங்களுடைய இணைய இதழில் எழுத்துறுக்கள் இவ்வாறு ???????? தெரியும்.

தமிழ் எழுத்துறுவை உள்ளடக்கிய எழுத்துறுவின் பெயர் utf8_general_Ci .
ஆகவே உங்களுடைய தரவு தளத்தில் உள்ள அனைத்து அட்டவனைகளையும் utf8_general_Ci என்ற வகைப்பாட்டிற்கு மாற்ற வேண்டும்.
அவ்வாறு கீழ்கானும் வேர்டுபரஸ் தரவுதளங்களை மாற்றுவதன் மூலம் தமிழில் உங்களால் உள்ளிட இயலும்.

image

—————————————-
இதோ உங்களுடைய தமிழ் மனக்கும் இதழ்.

மேற்கூரிய பிரச்சினையிலேயே தங்களூடைய இணைய இதழை கைவிடுகின்றனர்.

எந்தெந்த தரவுதள அட்டவனைகளின் வகைபாடுகளை மாற்ற வேண்டும் என்று அடுத்து இதழில் கானுவோம்.

இணைய இதழ் உருவாக்கத்திற்கு மட்டும்
ரூ.6000 வருடத்திற்கு ஆகும்(தனியாரிடம் விட்டீர்களானால்)
ஆக மொத்தம் 600+2000+6000=ரூ8600 வருட செலவு பிடிக்கும்.

ஆனால் சில வகைகளில் இதனை குறைத்து வெறும் ரூ.600 வருட செலவிலேயே உங்களுடைய இதழை உருவாக்கலாம்.எப்படி என்று வரப்போகும் மின்னிதழ்களில் பார்க்கலாம்.

இப்படிக்கு
திரு.அஆஇஈ

தமிழ் இணையதளம் 1

அப்படி இப்படின்னு ஒரு வலை பூவை தமிழில் உருவாக்கலாம் என்றால் அதற்குல் போதும் போதும் என்றாகி விட்டது.

ஆங்கிலம் தவிற மற்ற மொழிகளில் வலைப்பூவை ஆரம்பிக்க போதிய வழிகாட்டுதல் இல்லை இதை தவிற தமிழில் வலைப்பூ உருவாக்க சில தடைகளை இயற்கையாக உள்ளன.

மேலும் அதிக அளவில் உள்ள IT துறை பொறியாளர்களோ அல்லது கணிணி சார்ந்த பொறியாளர்களோ அதிக அளவில் தமிழ் வலைப்பூ உருவாக்கல் குறித்து எழுதி இருப்பார்கள் என்று தேடி பார்த்தால்அப்படி ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை.

image

நான் கண்டறிந்த தீர்வுகள்.

….தமிழ் வலை பாமரனுக்குமே…

தீர்வுகள்

வசவர்

சமூகத்தற்கு தேவையான கருத்துகளை கொன்டதோடுமட்டும் அல்லாது அதனை கட்டமைக்கும் பெரியோர் அனைவரும் வசவர்களஆகவே இருப்பர்.

எல்லோரும் நியூட்டனின் புவி ஈர்ப்பு கொள்கைகளை நம்பியே இருந்த போது அதற்கு முற்றிலும் மாறான கால வெளி வளைவை குறித்து ஆராய்ந்ததாலேயே ஐன்ச்டீனுக்கு சார்பியல் கொள்கைகள் கிடைத்தன.

எங்கும் எதையும் எதிர்க்கும்,சிந்திக்கும் ஒரு தலைமுறை இன்று தேவை.

தமிழ் சார்

தமிழில் அனைத்து பாடங்களும் கற்பித்து தமிழிலேயே நம் தமிழ்நாட்டு மானாக்கர் சிந்தித்து தமிழிலேயே அனைத்து துறைகளும் வளர்வதை கானும் கொடுப்பினை இனி நமக்கு வாய்க்காதோ.

தமிழில்தான் திரு.மயில்சாமி அன்னாதுறை அவர்கள் படித்து இன்று நிலவில் நீரை கண்டார்.
திரு.அப்துல கலாம் அவர்கள் பல நவீன ஏவுகனைகளை உருவாக்கினார்.

இப்படி எத்துனை முறை தமிழர்கள் தத்தம் திறமைகளை நிருவினாலும் அவர்களின் மொழி மட்டும் ஏனோ அங்கீகரிக்கப்படுவதில்லை.

பொறியாலர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும்,பேராசிரியர்களுக்கும் அடிப்படை வகுப்பு பயிலும் நமது பள்ளி மானாக்கருக்குமான இடைவெளியே தமிழில் படிக்கும் மனப்பான்மை குறைய காரனமாகிறது.

எனவே இன்றைய பொறியியல் ,மறுத்துவம் சார்ந்த மற்றும் பல்துறை பேராசிரியர் பெருமக்கள் தத்தமது பிள்ளைகளை தமிழ்வழி கல்வி கற்க அரசு பள்ளிகளில் மட்டுமே சேர்ப்பேன் என்ற உரிமை கொள்ள வேண்டும்.

இன்று இதை செய்ய மறப்போமாகில் நம் பிள்ளைகளை நாமே விசம் கொடுக்க துணிந்தவராவோம்.

___திரு.அஆஇஈ

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

அறிவியல் மற்றும் தொழில்நுடபம் மட்டுமே மக்களை காப்பாற்ற இயலும் ஆனால் அதற்காக மக்கள் கொடுக்க வேண்டிய விலைதான் அதிகம்.

இதற்கு இடையில் தான் அரசியல் நாடகங்கள் வியாபார கொள்ளைகள் நடக்கின்றன.

இதை ஏற்று கொள்ள செய்யவே அரசாங்க அமைப்புகளும் உள்ளன.

இதில் உள்ள வகைப்பாடு தான் ஜனநாயகம் சமதர்ம கொள்கைகளும் உருவாகின்றன.

இதை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்கிறோர்களோ இல்லையோ அமைதி கருதி மௌனிக்கிறார்கள்.

சமதர்ம (socialism) கொள்கைகளை அறிவியலோடு ஒருங்கினைக்கும் ஒரு சமுதாய கட்டமைப்பு இன்று தேவை.

அதற்கான விடிவைதான் பல ஆண்டுகளாக சமதர்மவாதிகள் தேடுகிறார்கள்.

இதற்கு இடைப்பட்ட வெளியில்தான் முதலாளித்துவம் தன்னை நிலை நிறுத்த முற்படுகிறது.

எல்லாவற்றிலும் பொருளாதார நோக்கமா என்ற வினா “ஆம்” என்கிற உண்மையை நாம் அறிவதில் இருந்து நம்மை தவிர்க்கிறது.

-அவளன்