இசை..வரையிலி

இன்று சிறிது சிறிதாக தமிழர்களின் கலை நுணுக்கங்களுக்கு தடை,மறுப்பு போடப்படுகிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றுறைத்த தமிழருக்கு சொந்த மன்னிலேயே சிறுமை பல வழிகளிலும் ஏற்படுகிறது.

இன்றளவில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் பல இளம் தளிர்கள் பாடுவதைக்கண்டு மகிழ்கிறோம்.
….தவறேதும் இல்லை….

அப்படி ஒரு நிகழ்ச்சியை விடுமுறைகளில் காணும் போது ஏற்பட்ட ஏற்றுக்கொள்ள இயலாத நிகழ்வொன்றை பகிர விளைகிறேன்.

ஒரு தமிழ் சிறுமி தனியார் நடத்தும் விளம்பரதாரர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து மிக மிக அருமையாக பாடி அங்கிருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் திலைத்தால்.

அவள் பாடுவதைக்கண்டு எவரும் அவள் இளம் வயதில் இப்படி பாட இயலுமா என்று ஆச்சரியமாக அவளைப்பார்த்தார்கள்.
….ஆனால் அங்கிருந்த நடுவர் ஒருவரைத்தவிற…

அந்த குழந்தை தனக்கு மிகவும் உகந்த நாட்டுப்புறம் சார்ந்த குத்துப்பாடல்களை பாடினால்.

அது ஏனோ அந்த நடுவருக்கு பிடிக்காமல் போனது…!

அந்த நடுவர் ராகம்,சங்கீதம்,சரிகமபதனி,எழனி அழுவுனி என்று ராக வளைவுகளையே மும்முரமாக கவனித்தார்..
அவருக்கு தெரிந்தது அத்தகைய வகைப்படுத்தப்பட்ட பிராய்லர் சங்கீதமோ என்னவோ…
அவர் கடைசி வரை அந்த இளம் பாடகியை கருநாடக பிராய்லர் சங்கீதத்திலேயே பாடும்படி வற்புறுத்த முயன்றார்.

இளம் வயதில் வயதில் வயதை மீரி பாட துடிக்கும் அவள் எங்கே..
அவளை பிஞ்சிலேயே தட்டி வைக்க துடிக்கும் நடுவர் எங்கே…?
சிறு வயதில் குழந்தைகள் செய்யும் கிறுக்கல்களை பாராட்டும் போதுதான் அவர்கள் ஓவியர்களாகிறார்கள்…..

நம்ம ஊரு குத்தாட்டத்தை ஓத்த ஆங்கில பாப் இசையை உருவாக்கிய திரு. மைக்கேல் ஜாக்சன் என்ன திருவையாரில் வந்து முறைப்படி ஆலாபனை செய்தவரா….

உங்களால் முடிந்தால் குழந்தையை ஊக்குவித்து இந்திய,பாரசீக அமெரிக்க ..ஏன் அண்டத்தின் எல்லைகளை தாண்டுமளவு குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள்.

அதைவிடுத்து திருவையாருக்குள்ளாக இசையை அடக்க முயற்சித்து வருங்கால இசை சிட்டுக்களின் இறகை ஒடிக்காதீர்.

மேலும்  “முறைப்படி சங்கீதம் கத்துக்கொள்” என்று இக்கு வைத்து பேசாதீர்கள்.

அப்பொழுது நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர் அந்த குழந்தையை தேற்றினார்.

அவளை அவளுக்கு பிடித்தமானவற்றையே பிந்நாளிலும் பாடும்படி அறிவுறுத்தினார்.

மேலும் நாம் முன்னர் கூரிய நடுவர் அவள் பாடியதைக்குறித்து அந்த பெண் குழந்தையின் குரல் ஆண்  குழந்தையின் குரளை போன்று உள்ளது எனவும் கூறினார்.

இவையெல்லாம் எவ்வளவு மோசமான வர்னனைகள்.
நடுவர் என்றால் அதற்காக இப்படி நினைத்ததையெல்லாம் பேசுவதா..?

இப்படி பொத்தாம் பொதுவாக எழுப்பப்படும் கற்பனைகள் பின்னாலில் பலரது வாழ்வோட்டத்தையே மாற்றியிருக்கின்றன.

உதாரனத்திற்கு:தமிழகத்திலிருந்து ஓட்டப்பந்தய வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரினை பற்றி எழுப்பப்பட்ட இத்தகைய சந்தேகங்கள்தான் பின்னாளில் அவரது வாழ்வையே பாதாளத்திள் தள்ளியது.

உண்மையில் ஜெனடிக்ஸ் துறையே கூறுவது என்னவெனில் ஆண் என்றோ பெண் என்றோ திருநங்கையென்றோ ஒன்றுமில்லை இவைகளெள்ளாம் வெறும் சதவிகித மாற்றங்களே.

அனைத்தும் சதவிகித மாற்றம் என்று வரையறுத்து கூறுகிறது அறிவியல்…
ஆனால் அதற்கு முறனான வேலைகளை செய்யுமாறு பணிக்கப்படுகிறது அறிவியல்.

இப்படி அறிவியல் துறையே இத்தகைய விசயங்களில் இறுதியான உறுதியான முடிவுகளை எடுக்கும் அளவிற்கு பக்குவமடைந்ததாக இல்லை,
இதுவரை கண்டறிந்த அறைகுறை ஆராய்ச்சி முறைகளை அப்பட்டமாக ஏற்றுக்கொள்ள வற்புறுத்துவதும் முட்டாள்தனமே தவிற வேறில்லை….

……………….சிந்திக்க……………

திரு.காக்கைபாடினி