அறிவியல் கலைச்சொர்களை உருவாக்கவோம்

அறிவியலில் கலைச்சொல் அகராதியினை தமிழ்நாடு அரசு கணிணியில் வெளியிட்டுள்ளது.
சுமார் 65000 தொழில்நுட்ப மற்றும் பல்துறை வார்த்தைகளுக்கான தமிழிணைகளை தொகுத்துள்ளது.

ஒரு காலத்தில் ‘பஸ்’ என்ற வார்த்தை வெகு இயல்பானதொரு வார்த்தையாக வழக்கில் இருந்தது.

இன்றோ
பேருந்து என்ற வார்த்தை அதற்கு இனையான மாற்றாக புழங்கப்படுகிறது.

திரு.சுஜாதா போன்றோர் தமிழை வளர்ப்பதாக கூரி அதனை சிதைக்கும் வழிகளில் (சில சமயம்) செயல்பட்டனர்.

உதாரணமாக மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்களை மையப்படுத்தி சில வார்த்தைகளை மொழிபெயர்ப்பது முட்டாள்தனம் என்று உரைத்தனர்.

தமிழின் தனித்தன்மையே அதன் காரணப்பெயர் முறைமையினால் ஆகும்.

தமிழ் வழியில் படிக்கும் மாணாக்கர் சில சமயம் சிந்திக்கும்போதும் தமிழிலேயே சிந்திக்கும் போக்கு உண்டு.

அறிவியல் சிந்தனை சீரிய முறையில் மிளிர சிந்தனையும் தாய்மொழியில் இருத்தல் அவசியம் என தமிழ் பெரியோர் பலர் உரைத்துள்ளனர்.

எனவே
காரணப்பெயர் முறைமையை மையக்கருவாக்கி தமிழினை பல்துறைகளில் வளர்த்திடல் வேண்டும்.

அதைவிடுத்து அண்ணிய மொழி வார்த்தைகள் தமிழில் கூடுவதை தவிர்த்திடல் வேண்டும்.

மேலும் தமிழ் பள்ளிகளிலேயே தத்தமது பிள்ளைகளை படிக்க வைத்திடல் வேண்டும்.
சிக்கணம் என்பதோடு மட்டுமல்லாமல் அருகாமையியே அமைந்து படிக்கும் பிள்ளைகள் காலையிலும் மாலையிலும் நன்றாக நேரம் கிடைக்கும்.தத்தமது தம்பட்டத்திற்காக பிள்ளைகளை கடிந்து கொள்ளுதலை தவிர்க்க வேண்டும்.
பிள்ளைகளை தோல்வியுறக் கற்றுக்கொடுக்க வேண்டும்.அப்பொழுதுதான் வெற்றி மட்டுமே முக்கியம் என்ற மிருகத்தனமான தன்மை குறையும்.

தோல்வி மற்றும் வெற்றி இவை இரண்டுமே முக்கியம் என்ற உணர்வு போதிக்கப்பட வேண்டும்.

இதை எழுதும் நானும் தமிழ் வழியிலேயே பன்னிரென்டாம் வகுப்பு வரை பாடம் பயின்றேன்.

கல்லூரியில் மட்டும் தமிழ் வழியில் பொறியியல் பயிலும் வாய்ப்பு கிட்டியிருக்குமானால் தமிழிலேயே பொறியியலையும் கற்றிருப்பேன்.
அப்பொழுது அவ்வாய்ப்பெல்லாம் இல்லை.

ஆனால் இன்று உள்ளது.!

சிறு குழந்தைகளை (LKG) சேர்க்க 1 லட்சம் செலவு செய்வதை விட அரசு பள்ளிகளில் இலவசமாக சேர்த்து மின்னனு தொடுதிரைகளை (tablet) வாங்கிக்கொடுக்கலாம்.

பெற்றோர் அதிக நேரம் குழந்தைகளுடன் பழகினால் மட்டுமே அவர்களை வல்லவர்களாகவும் நல்லவர்களாகவும் வளர்க்கமுடியும் என்பதில் இருவேரு கருத்துக்கு வாய்ப்பில்லை.

பெரும்பாலும் 7வயது வரை குழந்தைகள் தங்களது பெற்றோர் செய்யும் செயல்களையே செய்யும்.
நீங்கள் வரைகின்றீர்கள் எனில் அதைப்பார்த்து குழந்தைகள் வரையும்.
இவ்வாராக நாம் அவர்களுக்கான விருப்பத்தை உணர்ந்து செயல்பட்டால் வருங்கால தமிழ் சமூகம் சீரிய முறையில் உருவாகும் என்பதில் ஐயம் இல்லை.
//பிழைகளை மன்னிக்கவும்//

…….பூங்குழலி…….