சுய நாணம் ஏன்.?

இன்று பலருக்கு, குறிப்பாக தமிழருக்கு தமது சுய அடையாளங்களை வெளிப்படுத்துவதில் தயக்கம் உள்ளது.

இங்கு யாரும் தானாக இருக்க நானுகின்றனர்.தஙகளை தங்களாக வெளிப்படுத்துவதில் தயக்கம் உள்ளது.

புகைப்படக்கடையில் புகைப்படத்தை அழகாக்கும்படி கூறுவதில் இருந்து …
முகத்திற்கு அளவிற்கு மீறி பூசனத்தை பயன்படுத்துவதுவரை..

தமிழில் பேசி அடங்காத சன்டைக்காரனிடம் அவனுக்கு புரியாத ஆங்கிலத்தை பேசும் வரை….
இப்படி மொழி,தேவை மற்றும் பொருளாதாரம் வரை அனைத்திலும் நம்மவர் தங்களுடைய சுயத்தை வெளிப்படுத்த தயங்குகின்றனர்.
இவற்றுக்கான வேர் எங்கிருந்து பரவலானது என்று சற்று ஆராய்ந்தோமானால் இவை அனைத்தும் உருவகம் சார்ந்த ஊடகத்துறையினால் திட்டமிட்டு எம்மவருக்குள் புகுத்தப்பட்டுள்ளது தெரிய வரும்.

ஊடகத்துறையினர் தமக்கான பொருப்பாக எண்ணாது மக்கள் விரும்புவதாக செய்த இது போன்ற விடயங்கள் பின்னாலில் “துளி நஞ்சுண்ட பால் போன்றதானது”.
வெள்ளையர் நமது நாட்டை நம்மிடம் விடும்போது மூன்று விடயங்களில் யம்மவரை தனித்தியங்க மறைமுகமாக அனுமதிக்கவில்லை.

கல்வி
மொழி
சட்டம்

ஆகிய மூன்றிலும் ஆங்கிலத்தை மாகான இணைப்பு மொழி என அறிவிக்க செய்து இத்துறைகளில் மாகான மொழி பெயர்ப்புகள் அல்லது மாகாணம் சார்ந்த மாற்றங்கள் நிகழ அனுமதிக்கவில்லை.

“கேயாஸ் தியரி” எனப்படும் “சிருமூல பெருவிளைவு” கொள்கை அடிப்படையில் ஆரம்பத்தில் திட்டமிட்டு புகுத்தப்பட்ட
இத்தகைய சிரு மாற்றங்கள் பெரிய அளவில் சுய ஒழிப்பு விளைவுகளாக இன்று மாந்தரிடையே உளாவுகின்றன.

முதலில் கல்வியில் இவ்விளைவுகளை குறித்து பார்க்கலாம்

ஆங்கிலேயர் விட்டுப்போன உடன் கல்வித்துறையால் தனித்தியங்க முடியவில்லை.
அறிவியல் கல்வி
பொறியியல் கல்வி
அடிப்படை கல்வி என அனைத்தையும் மொழி மாற்றம் செய்வதில் இருந்த இயலாமை மற்றும் சோம்பேரித்தனத்தால் அன்றிருந்த கல்வியாலர் அப்படியே ஆங்கிலத்தை பாடநூல் தயாரிப்பு மொழியாக ஏற்றுக்கொண்டனர்.
இவ்வாறாக கல்வித்துறை அனைத்திலும் ஆங்கிலம் சரளமாக சகட்டு மேனிக்கு பாயத்தொடங்கியது.
நம் நாட்டிலேயே மாகான மொழி மானாக்கர்,தேசிய மொழி மானாக்கர் மற்றும் ஆங்கில மொழி வழி மானாக்கர் என உருவாகலாயினர்.
இவர்களுக்கிடையே நிழல் மதில் ஒனறு சமூக பொருளாதார ஏற்ற தாழ்வின் அடிப்படையில் மெல்ல உயர எழம்பியது அல்லது மெல்ல எழுப்பப்பட்டது.
ஆங்கில வழி பயின்றோர் பொருள் படைத்தனரெனவும் தமிழ் வழி படித்தோர் வக்கற்றோர் எனவும் ஒரு மாயை திட்டமிட்டு ஊடகத்துறையினரால் புகையிடப்பட்டது.

இவை மட்டும் இன்றி ஆங்கில வழிக் கல்வியிலேயே உயர் வசதி படைத்தோருக்கென கான்வென்டுகள் உருவாகலான.
இவை கொஞ்ச நஞ்சம் நமது மரபுபொருளில் ஒட்டியிருந்த தமிழை வேறோடு பிடுங்க தொடங்கின.
இதனால் தமிழ்நாட்டிலேயே கான்வென்டு கொட்டகைகளில் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் அளவிற்கு உரு பெற்றது.
இவைகளை குறித்து துளியும் வருந்தாத ஆசிரிய பெருமக்களால் இந்நிலைமை இன்றும் உள்ளது.
ஆசிரியர் தொழில் விரும்பி ஏற்காதவர்களால் சூழப்பட்டதால் மனவுறம் நெஞ்சுறம் தன்னம்பிக்கை கொண்ட மானாக்கர் வகுப்புகளில் உருவாவதற்கு பதிலாக ஊதாரிகள் உருவாகினர்.
அவர்கள் தம் நிலைமையை சரி செய்யவே இயலாத நிலையில் இருக்கும் போது எவ்வாறு இவைகளை சிந்தையுற செய்யவைக்க இயலும்.

“பிழைப்புக்கு இனி ஆங்கிலம் தேவையில்லை”

இதை சற்று உணர்க…
இன்றளவில் நாம் அதிகம் பயன்படுத்தும் கூகிள் தேடு பொறி மூலமாக தமிழில் தேட இயலும்…
தமிழிலிருந்து 40 உலக மொழிகளிலும் மற்ற மொழிகளில் இருந்து தமிழுக்கும் மொழு பெயர்க்க இயலும்.
நாம் தமிழில் பேசி அதனை நொடிப்பொழுதில் மற்ற மொழிகளுக்கு ஒலி வடிவில் மாற்ற இயலும்.
இத்தகைய மெண் பொருள்களின் திறனை பற்றி கேள்வி எழுப்பக்கூடாது.
எப்படி இந்த மென் பொருள்களின் தரத்தை உயர்த்துவது என ஆராயலாம்.

இன்று கணிப்பொறி துறை மானாக்கர் பலர் தங்களுக்கான படிப்பு சார் திட்ட வேலைகளில் கணிணியை குறித்து புதிதாக செய்ய இயலாது என்று என்னுகின்றனர்.
தமிழில் இலவச இயங்குதளமான லினக்ஸ்-உபுன்டு உள்ளது ஆனால் தமிழில் command line எனப்படும் ஏவானை நிறைவேற்றி இல்லை.
இதனை ஒரு (project work) திட்டவேலைகளாக நிறைவேற்றலாம்.

இன்று ஒருவன் குழி பறித்தால்தான் நாளை மற்றொருவன் செடி நடலாம்.

பொருளாதார நோக்கம் காரணமாக தமிழை நம்மிடையே மறக்க செய்த ஆங்கிலத்தை அதே பொருளாதார நோக்கத்தால் வெல்ல முயல வேண்டும்.

திரு.மு.வரதராசனார் கூறிய கருத்துக்கள்தான் நினைவுக்கு வருகிறது.
ஒரு தலைமுறையை முழுவதும் தமிழிலேயே படித்து சிந்திக்க கற்றுக்கொடுத்துவிட்டால் போதும் அடுத்து வருபவர்களுக்கு நிலைமை மிக எளிதாக அமல்படுத்திவிடலாம்.

அடுத்து சட்டத்துறை பற்றி பார்ப்போம்.
முன்னரே எழுதி முடிக்கப்பட்ட சட்ட துறையானது அனைத்து மக்களுக்கும் சம நீதி வழங்கும் என்று உணரப்பட்டாலும் அவை மாகான மொழிகளில் இல்லாததால் ஏகப்பட்ட அலைக்களிப்புகள் சாமானியர்களுக்கு ஏற்படுகிறது.

இங்குதான் பனம் இருந்து சொந்தமாக வக்கீலை பனியமர்த்த முடிந்தவர்களுக்கு ஒரு நீதி இயலாதவர்களுக்கு ஒரு நீதி என தராசு வழக்கறிஞர்களின் வாய் ஞாலத்தில் ஊசலாட தொடங்கியது.

காசு கொடுத்தேனும் இதனால் சட்டத்தை வளைக்கும் போக்குதான் அதிகரித்துள்ளது.

இவைகளை களைய ஆசிரிய பெருமக்களும் வழக்கறிஞர்களும் தொழில்நுட்ப அறிவியலாலர்களும் விழிக்க வேண்டும் என்கிறேன்.

இப்படிக்கு

திரு.தென்னாடுடையன்

அருமையான தமிழ் பெயர்கள்

தொழ்காப்பியர் ,கணியன் பூங்குன்றன் காலங்களில் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று சில சமயம் தோன்றுகிறது.
அக்காலங்களில் நமது முன்னோர் முழுவதும் தமிழ் பெயர்களாலே அ முதல் ஃ வரை பயன்படுத்தி உள்ளனர்.ஆனால் இன்றோ பெயர் சுருக்கம் அயல் மொழியான சமக்கிருதத்தின் மற்றும் ஆங்கிலத்தின் வாயிலாக தடபுடலாக நடைபெறுகிறது.
திருவல்லிக்கேனி திருப்புளி கேனாகவும், பெருவுடையார் கோவில் ப்ருஹதீஸ்வரர் எனவும்  தஞ்சாவூர் தேஞ்சூர் ஆகவும் மாறியது சத்தமின்றி
நடைபெற்று விட்டது.

கேட்டால் கலாசார மாற்றம் என்ற சாக்கு போக்கு வேறு.
இப்படிப்பட்ட மாற்றம் ஏன் தமிழ் மற்ற மொழிகளில் செய்வதை பார்க்க முடியவில்லை என்று யோசனை செய்யலாம்.

தமிழை நீச பாசை என்று முத்திரை குத்துவது வேறு.!

எங்கு நோக்கிலும் ஆங்கில மற்றும் சமக்கிருதத்தின் வளர்ப்பு பிள்ளைகள்தான் என்ற நிலை உள்ளது.
உதாரணமாக இந்தியா என்றால் ஐரோப்பிய கண்டத்தாறுக்கும் அமெரிக்க கண்டத்தாறுக்கும் முதலில் நினைவுக்கு வருவது நமது தாஜ்மஹல் மட்டும்தான்.அதைத்தான்டிய இந்திய அடையாளங்களை ஏற்க மறுக்கின்றனர்.
சமக்கிருத மொழி ஐரோப்பிய பிணைப்பை உணர்ந்த ஐரொப்பிய குடிகள் ஏனோ தமிழ்மொழியின் தொண்மையை ஏற்க மறுக்கின்றனர்.

நமக்கு சற்றே 4000 கி.மீ க்கு அப்பால் உள்ள பகுதிகளான கடாரம் மற்றும் காம்போசம் என்று தமிழிடப்பட்ட நாடுகளான இந்நாளைய கம்போடியா மற்றும் மலையக மற்றும் சிங்கபுற தீவுகள் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சையை மையமாக கொண்ட சோழப்பேரரசின் கட்டுப்பாட்டில் இயங்கின்.

சோழர்கள் தாம்  ஆண்ட பகுதிகளில் தமிழ் கலை மற்றும் கலாசாரத்தை நன்றாக பரப்பி வந்துள்ளனர்.இன்றும் அவர்கள் பரப்பிய தமிழர்களின் கலை எச்சங்கள் ஆங்காங்கே பல நாடுகளில் இருப்பதை காணப் பெரலாம்.

இவ்வாறாக சோழர்களின்  கட்டுப்பாட்டில் இருந்த ஒரு தேசமான கம்போடியாவில் உலகிலேயே மிகப் பெரிய கோவில் ஒன்று உள்ளது.
அத்தகைய கோவில் இருந்த பகுதி இன்று ஆங்கர் வாட் என்று அழைக்கப்படுகிறது.
இந்த சொல் முதலில் சமக்கிருத வார்த்தையான நகர் +வட்டார் என்ற வார்த்தையிலிருந்து தருவிக்கப்பட்டதாக ஒரு அமெரிக்க எழுத்தாளர் விக்கிப்பீடியாவில் தெரித்திருந்தார்.
மேலும் வட்டார் =வட்டம் +ஆரம் என்னும் சமக்கிருத வார்த்தைகளில் இருந்து தருவிக்கப்பட்டதாகவும் எழுதியிருந்தார்.

கேட்பவன் கேனையன் என்றால் கேப்பையில் நெய் வடிகிறதாம்.

நகர்,வட்டம்,ஆரம் மற்றும் வட்டாரம் ஆகிய எந்த வார்த்தையும் சமக்கிருத சொல்லே கிடையாது.
ஆனால் தமிழ் மொழியில் இவ்வார்த்தைகள் உண்டு.

நகர் என்ற வார்த்தை நகர்ந்து செல்லள் என்ற வார்த்தையினின்றும் வட்டாரம் வட்டம் மற்றும் ஆரம் முதலான தூய தமிழ் சொர்களினின்றும் பெறப்பட்டது.

மேலும்
சிந்து என்ற வார்த்தை “நீரை சிந்து” என்ற வார்த்தையினின்றும்.

இந்தூர்,லாகூர்,பர்கூர்,உத்தம்பூர் என்ற வட மற்றும் தெந்நாட்டார் ஊர் பெயர்களில் உள்ள ஊர் என்ற வார்த்தை “ஊறுதல்,ஆற்று நீரால் ஊரிய செழிப்பான நிலம்” என்ற பொருள்படவே ஊர் என்ற வார்த்தை தமிழில் உரு வானது.

ஆறு என்ற வார்த்தைக்கு பாதை என்று பொருள்.ஆற்று நீர் பாதைகளே அக்கால தடையற்ற பாதைகளாக இருந்தன.அதனாலேயே இன்றளவும் “இவ்வாறாக வந்தேன் ” “அவ்வாறாக போனேன்” என்று இயல்பாக கூறுகிறோம்.

இப்படி தமிழ் வார்த்தைகள் பலவற்றை கடன் பெற்று உருவான சமக்கிருத மொழியை பின்னாலில் அதன் தொன்மையை மட்டுமே காட்டி கடன் பெற்ற வார்த்தைகளை மறைத்து மறந்து அவ்வார்த்தைகள் சமக்கிருத வார்த்தைகளே என்று வடநாட்டார் கூறினர்.
அதையே அமெரிக்க மற்றும் பிற கண்டத்தாறும் அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டனர்.

கம்போடிய தலை நகர் இருந்த பகுதி நகர வட்டாரம் என்று வழங்கப்பட்டிருக்க கூடும்.பெறும் பாலும் நகரத்தார் பர்மா தாய்லாந்து மலையக,கம்போடிய போன்ற பகுதிகளில் வானிபம் செய்து வந்துள்ளனர்.

அவர்கள் வானிபம் சிரக்கும்போது சிவன் கோவிலை அரசர்களின் துனை கொண்டு கட்டுவது வழக்கம்.
அவ்வாறாக கட்டப்படும் கோவில்களுக்கு நகரத்தார் கோவில்கள் என்றும் சில சமயம் அழைக்கப்பெறுவதுண்டு.
அவ்வாறாக சிவன் கோவிலாகவே இக்கோவிலும் எழுப்பப்பட்டுள்ளது.பின்னர் சோழர்களின் சைவ வைனவ மதமாற்றத்தால் பின்னாளில் விஷ்னு கோவிலாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதன் பின் பௌத்த கோயிலாக மாறியது வேறு கதை.

இக்கோவில் நமது தஞ்சை பெரிய கோவில் கட்டி 150 முதல் 200 ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது.
கட்டியவர் சூரிய வர்மன்.
இவர் கமர் மன்னர் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளார்.
வர்மன் அல்லது வர்மர் என்ற பட்டம் அக்கால தமிழ்  சோழ மன்னர்களால் புழங்கப்பட்ட ஓன்று.
உ.தா
அருள்மொழிவர்மன்
ஆதித்த வர்மன்
போன்ற பெயர்களில் உள்ள வர்மன் என்ற வார்த்தைகளே சான்றாகும்.
ராசேந்திர சோழ மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்த கடார காம்போச தேசங்கள் பின்னாளிலிலும் அவனின் ஆட்சிக்குட்பட்ட சோழ தேசத்து உற்றார்களால் ஆழப்பட்டு வந்துள்ளது.
இன்றளவும் காம்போச தேசத்தில் உள்ள நதிகளின் தோற்றுவாய்களிள் சிவலிங்கங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

மேலும் சல்லி சகதிகளால் ஒரு தளத்தை உருவாக்கி அதன் மீது கோவில் , வீடு கட்டப்படும் வழக்கம் திராவிட கலாசாரமான சகதி கட்டுமான முறையில்தான் இக்கோவிலும் கட்டப்பட்டுள்ளது.
இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே செல்லலாம் தமிழரின் கடல் கடந்த சாதனைகளை.
ஆனால் இதனை புரிந்து கொள்ளவோ ஏன் சற்றே சிந்திக்கவோ கூட அயலார் மறுக்கின்றனர்.
இவை அநைத்தையும் சுட்டிக்காட்டிய பின்னரும் அந்த அமெரிக்க எழுத்தாளர் ஏற்க மறுத்துவிட்டார்.
எனவே நானும் அவர் கூரியவற்றிற்கு ஆதாரம் தேவை என்று சுட்டி விட்டிருந்தேன்.
இதனை உணர்ந்த அமெரிக்க எழுத்தாளரோ ஏன் பிரச்சினை என்று நகரம் வட்டம் ஆரம் முதலான வார்த்தைகள் கமர் மொழியில் இருந்து தருவிக்கப்பட்டவை என்று மாற்றிவிட்டார்.
எனக்கு கமர் மொழி தெரியாததால் மேலும் அவரிடம் வாதம் செய்யவில்லை.
கமர் மொழி தெரிந்த தமிழர்களின் ஆராய்ச்சிக்கே மீதம் உள்ளவற்றை விட்டு விடுகிறேன்.
தமிழர்கள் அத்தகைய நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டினால் நன்கு ஆராயுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழர்களாகிய நாம் முற்றிலும் சமக்கிருத கலப்பற்ற பெயர்களில் தத்தம் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டி மகிழ வேண்டும்.

உதாரனத்திற்கு
கொடிமலர்
பூங்குழலி
தமிழ்செல்வி
மற்றும் இன்ன பிற பெயர்களை சூட்டி மகிழலாம பெருமையும் கொள்ளலாம்.

ஐஸ்வர்யா,நிகிதா,சுஷ்மிதா போன்ற நீச மொழிகளால் பெயரிட்டு தமிழை தயவுற கொச்சைப்படுத்த வேண்டாமே.
———————————————————-
இவள்.நான்மனிக்கடிகை
(பிழைகளுக்கு மன்னிக்கவும்)