சுய நாணம் ஏன்.?

இன்று பலருக்கு, குறிப்பாக தமிழருக்கு தமது சுய அடையாளங்களை வெளிப்படுத்துவதில் தயக்கம் உள்ளது.

இங்கு யாரும் தானாக இருக்க நானுகின்றனர்.தஙகளை தங்களாக வெளிப்படுத்துவதில் தயக்கம் உள்ளது.

புகைப்படக்கடையில் புகைப்படத்தை அழகாக்கும்படி கூறுவதில் இருந்து …
முகத்திற்கு அளவிற்கு மீறி பூசனத்தை பயன்படுத்துவதுவரை..

தமிழில் பேசி அடங்காத சன்டைக்காரனிடம் அவனுக்கு புரியாத ஆங்கிலத்தை பேசும் வரை….
இப்படி மொழி,தேவை மற்றும் பொருளாதாரம் வரை அனைத்திலும் நம்மவர் தங்களுடைய சுயத்தை வெளிப்படுத்த தயங்குகின்றனர்.
இவற்றுக்கான வேர் எங்கிருந்து பரவலானது என்று சற்று ஆராய்ந்தோமானால் இவை அனைத்தும் உருவகம் சார்ந்த ஊடகத்துறையினால் திட்டமிட்டு எம்மவருக்குள் புகுத்தப்பட்டுள்ளது தெரிய வரும்.

ஊடகத்துறையினர் தமக்கான பொருப்பாக எண்ணாது மக்கள் விரும்புவதாக செய்த இது போன்ற விடயங்கள் பின்னாலில் “துளி நஞ்சுண்ட பால் போன்றதானது”.
வெள்ளையர் நமது நாட்டை நம்மிடம் விடும்போது மூன்று விடயங்களில் யம்மவரை தனித்தியங்க மறைமுகமாக அனுமதிக்கவில்லை.

கல்வி
மொழி
சட்டம்

ஆகிய மூன்றிலும் ஆங்கிலத்தை மாகான இணைப்பு மொழி என அறிவிக்க செய்து இத்துறைகளில் மாகான மொழி பெயர்ப்புகள் அல்லது மாகாணம் சார்ந்த மாற்றங்கள் நிகழ அனுமதிக்கவில்லை.

“கேயாஸ் தியரி” எனப்படும் “சிருமூல பெருவிளைவு” கொள்கை அடிப்படையில் ஆரம்பத்தில் திட்டமிட்டு புகுத்தப்பட்ட
இத்தகைய சிரு மாற்றங்கள் பெரிய அளவில் சுய ஒழிப்பு விளைவுகளாக இன்று மாந்தரிடையே உளாவுகின்றன.

முதலில் கல்வியில் இவ்விளைவுகளை குறித்து பார்க்கலாம்

ஆங்கிலேயர் விட்டுப்போன உடன் கல்வித்துறையால் தனித்தியங்க முடியவில்லை.
அறிவியல் கல்வி
பொறியியல் கல்வி
அடிப்படை கல்வி என அனைத்தையும் மொழி மாற்றம் செய்வதில் இருந்த இயலாமை மற்றும் சோம்பேரித்தனத்தால் அன்றிருந்த கல்வியாலர் அப்படியே ஆங்கிலத்தை பாடநூல் தயாரிப்பு மொழியாக ஏற்றுக்கொண்டனர்.
இவ்வாறாக கல்வித்துறை அனைத்திலும் ஆங்கிலம் சரளமாக சகட்டு மேனிக்கு பாயத்தொடங்கியது.
நம் நாட்டிலேயே மாகான மொழி மானாக்கர்,தேசிய மொழி மானாக்கர் மற்றும் ஆங்கில மொழி வழி மானாக்கர் என உருவாகலாயினர்.
இவர்களுக்கிடையே நிழல் மதில் ஒனறு சமூக பொருளாதார ஏற்ற தாழ்வின் அடிப்படையில் மெல்ல உயர எழம்பியது அல்லது மெல்ல எழுப்பப்பட்டது.
ஆங்கில வழி பயின்றோர் பொருள் படைத்தனரெனவும் தமிழ் வழி படித்தோர் வக்கற்றோர் எனவும் ஒரு மாயை திட்டமிட்டு ஊடகத்துறையினரால் புகையிடப்பட்டது.

இவை மட்டும் இன்றி ஆங்கில வழிக் கல்வியிலேயே உயர் வசதி படைத்தோருக்கென கான்வென்டுகள் உருவாகலான.
இவை கொஞ்ச நஞ்சம் நமது மரபுபொருளில் ஒட்டியிருந்த தமிழை வேறோடு பிடுங்க தொடங்கின.
இதனால் தமிழ்நாட்டிலேயே கான்வென்டு கொட்டகைகளில் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் அளவிற்கு உரு பெற்றது.
இவைகளை குறித்து துளியும் வருந்தாத ஆசிரிய பெருமக்களால் இந்நிலைமை இன்றும் உள்ளது.
ஆசிரியர் தொழில் விரும்பி ஏற்காதவர்களால் சூழப்பட்டதால் மனவுறம் நெஞ்சுறம் தன்னம்பிக்கை கொண்ட மானாக்கர் வகுப்புகளில் உருவாவதற்கு பதிலாக ஊதாரிகள் உருவாகினர்.
அவர்கள் தம் நிலைமையை சரி செய்யவே இயலாத நிலையில் இருக்கும் போது எவ்வாறு இவைகளை சிந்தையுற செய்யவைக்க இயலும்.

“பிழைப்புக்கு இனி ஆங்கிலம் தேவையில்லை”

இதை சற்று உணர்க…
இன்றளவில் நாம் அதிகம் பயன்படுத்தும் கூகிள் தேடு பொறி மூலமாக தமிழில் தேட இயலும்…
தமிழிலிருந்து 40 உலக மொழிகளிலும் மற்ற மொழிகளில் இருந்து தமிழுக்கும் மொழு பெயர்க்க இயலும்.
நாம் தமிழில் பேசி அதனை நொடிப்பொழுதில் மற்ற மொழிகளுக்கு ஒலி வடிவில் மாற்ற இயலும்.
இத்தகைய மெண் பொருள்களின் திறனை பற்றி கேள்வி எழுப்பக்கூடாது.
எப்படி இந்த மென் பொருள்களின் தரத்தை உயர்த்துவது என ஆராயலாம்.

இன்று கணிப்பொறி துறை மானாக்கர் பலர் தங்களுக்கான படிப்பு சார் திட்ட வேலைகளில் கணிணியை குறித்து புதிதாக செய்ய இயலாது என்று என்னுகின்றனர்.
தமிழில் இலவச இயங்குதளமான லினக்ஸ்-உபுன்டு உள்ளது ஆனால் தமிழில் command line எனப்படும் ஏவானை நிறைவேற்றி இல்லை.
இதனை ஒரு (project work) திட்டவேலைகளாக நிறைவேற்றலாம்.

இன்று ஒருவன் குழி பறித்தால்தான் நாளை மற்றொருவன் செடி நடலாம்.

பொருளாதார நோக்கம் காரணமாக தமிழை நம்மிடையே மறக்க செய்த ஆங்கிலத்தை அதே பொருளாதார நோக்கத்தால் வெல்ல முயல வேண்டும்.

திரு.மு.வரதராசனார் கூறிய கருத்துக்கள்தான் நினைவுக்கு வருகிறது.
ஒரு தலைமுறையை முழுவதும் தமிழிலேயே படித்து சிந்திக்க கற்றுக்கொடுத்துவிட்டால் போதும் அடுத்து வருபவர்களுக்கு நிலைமை மிக எளிதாக அமல்படுத்திவிடலாம்.

அடுத்து சட்டத்துறை பற்றி பார்ப்போம்.
முன்னரே எழுதி முடிக்கப்பட்ட சட்ட துறையானது அனைத்து மக்களுக்கும் சம நீதி வழங்கும் என்று உணரப்பட்டாலும் அவை மாகான மொழிகளில் இல்லாததால் ஏகப்பட்ட அலைக்களிப்புகள் சாமானியர்களுக்கு ஏற்படுகிறது.

இங்குதான் பனம் இருந்து சொந்தமாக வக்கீலை பனியமர்த்த முடிந்தவர்களுக்கு ஒரு நீதி இயலாதவர்களுக்கு ஒரு நீதி என தராசு வழக்கறிஞர்களின் வாய் ஞாலத்தில் ஊசலாட தொடங்கியது.

காசு கொடுத்தேனும் இதனால் சட்டத்தை வளைக்கும் போக்குதான் அதிகரித்துள்ளது.

இவைகளை களைய ஆசிரிய பெருமக்களும் வழக்கறிஞர்களும் தொழில்நுட்ப அறிவியலாலர்களும் விழிக்க வேண்டும் என்கிறேன்.

இப்படிக்கு

திரு.தென்னாடுடையன்

One Reply to “சுய நாணம் ஏன்.?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *