கல்வி-மாற்று பார்வை

கல்வி—–

அரசாங்க பார்வை
________________________

ஏனடா உனக்கு வேலை கிடைக்கவில்லை,
ஏனடா நீ புத்துனர்ச்சியுடன் இல்லை,
ஏனடா உன்னால் பொருள்களை அசகாயமாக வாங்க இயலவில்லை…
ஏனடா நீ அவரைப்போன்றும் இவரை போன்றும்  இல்லை ..?

இப்படி அடுக்கடுக்காக மனிதன் என்கிற இயந்திரத்திற்கு கேல்விகளோ ஏராளம்…
____________________________
காசே இல்லாத தேவைகள் பூர்த்தியான அன்பான நிதானமான “பூங்குன்றனார் உலகம்” உருவாகுமா…!?
அன்று அவர் “யாதும் (எம்) ஊரே யாவரும் கேளிர்… என்று மிக சிறப்பாக திருவள்ளுவரை காட்டிலும் எளிமையாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்..

இதனை “வேறுபாடுகளை நோக்கும் மனித மனங்கள் உணர்ந்தால்  எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்…

இன்று நமக்கு நாமே நான் ,நீ,அவன்,இவன் வெள்ளையன்,கருப்பன,இவ்வூரன் அவ்வூரான்,மாநிலம்,நாடு என கோடுகளை இட்டு கொண்டு வாழ்கின்றோம்…

இன்றைய அறிவியலாலர் மனித இனம் முழுமையும் ஆப்பிரிக்காவின் தென் பகுதிகளில் இருந்துதான் தோன்றியது எனவும் அவர்கள் சுமார் லட்சம் வருடங்களுக்கு முன்னர்தான் அங்கிருந்து மற்றைய கண்டங்களுக்கு பெயர்ந்து பல இணங்களாக பிரிந்ததாக நிருவியுள்ளனர்.

அதன் பொருள் என்னவெனில் இதை எழுதும் நானும் இதை படிக்கும் நீங்களும் ஏதோ ஒரு வகையில் உறவுகளே...அதாவது மிகப்பெரிய ஒரு குடும்பத்தின் கிளைகளே…
___________________________________
இருப்பினும் பேதமானது எங்கு ஏற்படுகிறது எனில் “தேவை” என்ற ஒன்றுதான் நம்மை இவ்வளவு சூழ்நிலை சார்ந்த பேதங்களுக்கும் சார்ந்து இயங்குகிற ஒரு உண்ணியாக மாற்றுகிறது….

எனவே தேவை என்கிற ஒன்று பசி,அகந்தை ஆகிய சுவர்களின் மீது பலமாக கட்டப்பட்டுள்ளது….

பசி என்பது பல வகைகளில் ஏற்படும்…அவை அடிப்படை தேவைகளினின்றும் ஏற்படுவதும் பசியே..
நமது உலகில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு வகையில் மற்றவரின் பசிக்காக அன்றாடம் உழைக்கிறோம்….

1700 முதல் 1970 வரையிலான காலங்களில் ஏற்பட்ட மக்கள் தொகை பெருக்கமானது மக்களை தத்தமது பசி என்கிற தேவைகளை நிறைவேற்றி கொள்ள அதிகம் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியது…

வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்பதற்கு இனங்க …
மேற்சொன்ன உழைப்பை வழங்கும் மனிதர்களில் தத்தமது நேரத்தை குறைக்க வழி கண்டனர்…

இதனால் மற்றைய பேசத்தெரியாத மக்கள் மேலும் உழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்…

ஆனால் இங்கு மிக முக்கியமான மாற்றம் ஒன்று நிகழ்ந்தது அதுதான் “இயந்திரங்கள்

இயந்திரங்கள் மனிதன் உழைப்பு ரீதியாக சுரண்டப்படுவதை சற்றே குறைத்தன இதனால் வேலையின் பலு மிகவும் குறைந்தது…

இந்த இடத்தில்தான் நமது பிரச்சினையும் ஆரம்பித்தது…
நான் இதுவரை கூரியவற்றை கவனித்தீர்களானால் ஒரிரு வரிகளில் கூற வேண்டுமானால்……
பலவாறாக இருக்கும் மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்ய அன்று பல வகைகளில் உழைக்க வேண்டி இருந்தது.இயந்திரங்களின் வருகை வேலைப்பலுவை குறைத்தது…

இயந்திரங்களின் வருகைக்கு பின்னர் உண்மையில் உலகமானது தனது பசித்தேவைகள் பூர்த்தியாகிவிட்ட நிலையிலும்
ஏன் உழைப்பு என்கிற ஒன்று நமக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது..?
ஏன் உழைப்பு சார்ந்த தொழிற்கல்வி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது?…

மூளையில்லா எறும்புகள் எந்த கான்வென்டில் பட்டம் பெற்று நல்ல எறும்புகள் ஆகின?….
அவற்றுக்கு குழு மனப்பான்மையையும் சமூகத்துக்கு ஏற்ற உழைப்பையும் எங்கு கற்றுக் கொண்டன?….

கல்வி என்பது மனிதனுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தருவதற்காகவே என்பவை சும்மா காரணங்கள் மட்டுமே…

ஏன் எனில் இன்று உள்ள எந்த கல்வியும் மனிதனுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தருவது இல்லை அல்லது அவற்றை முதன்மை நோக்கமாக கொண்டவை இல்லை…

என்று உலகம் தனது தேவைகளை தாண்டி அனைத்து மனிதர்களையும் உழைக்க வலியுறுத்துகிறதோ அங்கு உலகம் பசியினால் இயங்கவில்லை மற்றவனின் பேராசைக்காக இயங்க ஆரம்பிக்கிறது…

பசியில் ஆரம்பித்து  பேராசையில் வந்து நிற்கும் இந்த உலகமானது இவ்வாறே நின்றுவிடப் போகிறதா எனில் கண்டிப்பாக இல்லை…

படிநிலைகளில் மேலே செல்ல செல்ல பேராசையின் அளவும் ஆதிக்கமும் சுரண்டலும் அதிகரித்த வண்ணமே இருக்கும்…

உதாரணத்திற்கு ஐக்கிய அமெரிக்க நாடானது இதற்கு ஒரு சீரிய எ.கா..

அங்கு கல்வி வியாபாராமானதும் பின்னாளில் அதே கல்வி மக்களின் மீது கட்டாயம் என திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது எனவே அங்கு உள்ள அனைவரும் கட்டாயமாக விருப்பு வெருப்புகளுக்கு அப்பார்பட்டு கல்வி பயின்றே தீரவேண்டும்…
இத்தகைய அமெரிக்காவில் மக்களின் உழைப்பு பிற மக்களை சுரண்ட மட்டுமே பயன்பட்டு வந்துள்ளது.தவிர வருமையில் உழலும் நாடுகளின் பசியினை ஒரு வகையிலும் போக்கவில்லை என்பது காண கண்கூடு.

கல்வி என்பது தனி மனிதனின் விருப்பம் சார்ந்த விடயம்…
பள்ளி கல்வி ஒத்துவராத குழந்தைகளே இவ்வுலகில் இல்லையா?…

ஐன்ஸ்டீன் முதல் எடிசன் வரை பலரும் …
பாரதி முதல் பெரியார் வரை…
ஏதோ ஒரு வகையில் கல்வியை விரும்ப வில்லை…

தனிமனிதனின் வாழ்வியல் சுதந்திரத்திற்கும் அவனது அறிவுசார்ந்த அனுகதலுக்குமாக கல்வி இல்லாமல் இன்று மானாக்கார்களை வெறும் பொருட்களாக (product)பார்க்கும் நிலையில்  எலும்புக்கூடாகி போன ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம்..

இங்கு உண்மையில் தனிமனிதன் மற்றைய மனிதனின் பசிக்காக அன்றி பேராசைக்கும் மட்டுமே பயன்படத்தப்படுகிறான்..

பேராசையின் ஊற்று பயத்தினின்றும்…
பயத்தின் ஊற்று சகமனிதனை நம்பாமையினின்றும்…

நம்பாமை”தான் “என்ற அகந்தை படிநிலையினின்றும் உறுப்பெறுகின்றன….

இதனால்தான் கல்வி,பொருளாதார,ரானுவ வலிமைகளில் மிகச்சிறப்பாக இருந்த அக்கால ஐரோப்பாவின் நாடுகள் ஒற்றுமையை மறந்து இருபெரும் உலக போர்களை சந்திக்க நேர்ந்தது …
இன்றுவரை போர்களால் அந்நாடுகள் சின்னாபின்மாகி  பல நாடுகள் இன்றும் கடனில் உழலுகின்றன….

இதில் கொடுமை என்னவெனில் இவற்றை பற்றிய சிந்தனைகளை சற்றே சிந்திக்க கூட கடுமையான தடைகளை நமக்கு நாமேயும் சமூகம் வழியாகவும் தடைகளை இட்டுக்கொள்கிறோம்…

இவ்வாறாக அனைத்திற்கும் ஊற்றாக இருக்கும் தான் என்கிற அகந்தையை கிள்ளி எரிய எண்ணியே அக்கால கணியன் பூங்குன்றனார்…
பெரியோரை வியத்தலும் இலமே…
சிரியோரென இகழ்தல் அதனினும் இலமே என்று கூரினார்….

கண்டங்களை கடந்த எல்லைகளோ பேதங்களோ இல்லாத ஒரு அண்டம் நமக்கு கிடைக்க கணியனின் 2000 வருடத்துக்கு முந்தின அண்டளாவிய (உலகளாவிய என்று கூறி கணியனை குறுக்க விரும்பவில்லை)
சிந்தனைகள் ஆசையா அல்லது பேராசையா… ..?

இப்படிக்கு…
திரு.சமன்…

தமிழில் செய்க..

தமிழில் கீழ்க்கண்டவற்றை செயல்படுத்த வேண்டுகிறோம்..

தமிழில் இவை வரும் காலம் எப்போதோ?!!!

1)தமிழ் கெர்னல்(மைய இயங்கு தளம்)
2)தமிழ் லினக்ஸ்
இலவச நிரலியங்கு தளம்
3)தமிழ் ஸ்வைப் (கோடிடி)
4)தமிழில் டொமைன் (இயங்குதள குறியீடு உ.தா: .com,.net போன்று .தமிழ் அல்லது .வர் (த்தகம்) .வலை அல்லது .குழு .இணை)
5)தமிழில் அதிகளவில் மென்தட்டச்சு(ஆன்டிராய்டு,சன்னல் ஆகிய வலைத்தலங்களில்)
6)தமிழுக்கான சர்வதேச அங்கீகாரக்கொடி
7)தமிழில் அறிவியலில் தொன்றாற்றுவோருக்கு வெகுமதி விருதுகள்.
தமிழ் வங்கிகள்
(அனைத்தும் தமிழில் மட்டுமே)
8)தமிழில் நிரல் மொழி..
9)தமிழில் இலவச மென்னூலகங்கள்.

இவை அனைத்தையும் உருவாக்கிட கணிணி சார் மற்றும் பிற துறையினரையும் அன்புடன் வேண்டுகிறோம்..

மேற்கண்ட விடயங்கள் இல்லாமையினால் தமிழ் நமது அடுத்த இணைய தலைமுறையை சென்றடைவதில் பெருஞ்சிக்கல் ஏற்பட்டுள்ளது…
இவைகள் உருவாகும் பட்சத்தில் அயலக மற்றூம் ஊர்புற தமிழர்கள் ஆங்கிலத்தில் நனைய வேண்டி இருக்காது…

கூடாது…
மிகவும் ஆபத்தானது..
இது மீன்டும் ஒரு இணைய காலனி ஆதிக்கத்திற்கு வழி வகுத்துவிடும்..

ஆங்கிலம் பிழைப்புவாதத்தை மையப்படுத்தி நம்மை மாற்ற முயல்கிறது..

ஆங்கிலேயருக்கு முன்னமே தோனி விட்டோர் தமிழர்…

ஆங்கிலேயருக்கு முன்னமே மொழி வளர்த்தோர் தமிழர்

ஆங்கிலேயருக்கு முன்னமே உலகை ஆன்டோர் தமிழர்…

…ஆங்கிலம் ஒரு சாக்கடை…
செந்தமிழினை சாக்கடைக்காக இழத்தல் சரியாமோ…?

திரு.சாவா