உண்மை கதாநாயகன்கள்

1985 முதல் இன்று வரையிலான தமிழ் படங்களில்   கதாநாயகன்களின் யோக்கியதைகளையும் அதற்கு காரணமான விடயங்களையும் சற்றே அலசுவோம்.

மேலும் இன்றைய தமிழ் இளைஞர்கள் எவ்வாறு வலுக்கட்டாயமாக தேவையில்லா மூலைச்சலவைக்கு ஆளாகிறார்கள் அதன் பயனாக எவ்வாறு தங்கள் கைகளாளேயே தங்களின் எதிர்காலம் என்கிற கண்களை குத்திக் கொள்கிறார்கள் என்பதையும் அலசுவோம்.

பல தந்தைமார்கள் கடினமாக உழைத்து தனது பிள்ளைகளை யாதொரு கடினமும் அடையாமல் தங்கள் பிள்ளைகளை வளர்க்கின்றனர் ஆனால் இதனாலயே தானாக சிந்தித்து முடிவெடடுக்கும் பழக்கம் இல்லாமலேயே வளர்ந்து விடுகின்றனர்.

இதன் காரணமாக தனக்கு இவை இவை தேவை, தேவையில்லை என்பதை பற்றிய சிந்தனையே இல்லாது பெற்றோரரின் கைப்பாவைகளாக மாறிவிடுகிறார்கள்.

இதன் பின்னர் தனது படிப்பு ,உடை,நன்பர்,பொருள்கள் இவையனைத்தையும் விளம்பரதாரர்களும்,கதா பாத்திரங்களும் தீர்மானிக்கும்படி ஆகிவிடுகின்றனர்.

படத்தில் கதாநாயகன் ஒரு குறிப்பிட்ட படிப்பை படித்தால் தானும் படிக்க முடிவெடுக்கும் பித்துக்குளிகளாகவும் குருடர்களாகவும் மாறிவிடுகின்றனர்.

சரி இங்கு படிப்பை தேர்ந்தெடுக்கத்தான் தூன்டிவிட்டார்கள் என்றால் அத்தோடு விட்டு விடுகிறார்களா எனில் இன்னும் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று பார்க்கலாம்..

படிக்கும் வளாகத்தில் உலாவ புகைவன்டியை வாங்கித்தர தந்தையை வருமானத்தை மீறி வற்புறுத்துவதில் தொடங்கி கைக்கடிகாரம்,அமெரிக்க வகை ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த கைப்பேசி என இந்த பட்டியல் மிக நீளமானது..

இப்படி மறைமுகமாக வனிக நிறுவனங்களிடம் மாட்டி சீரளிகிறார்கள்..

இவர்கள் வாங்கும் பொருள்களின் மூலமாக  இத்தகையவர்களை மறைமுக விளம்பரதாரர்களாக பழக்கி தன்னை சுற்றி உள்ளவர்களையும் அதை வாங்க தூன்டுகிறார்கள் அல்லது பொருள் சார் தாழ்வுமனப்பான்மையை தன்னை சுற்றியுள்ள மாணாக்கரிடம் விதைக்கிறார்கள்..

மேலும் கல்லூரியில் தங்களுக்கு பாடங்களை சொல்லித்தர வரும் ஆசிரியர்களை சில படங்களில் மிகவும் மோசமான முறையில் சித்தரித்து அவர்களை வழிகாட்டியாக நினையாது அவர்களை மிகவும் மொக்கையான ஒரு  குனகமாக நினைக்கவைத்து..
கல்லூரிக்கு செல்வதே அவர்களை பழிக்கவும் மற்றும் ஏமாற்றவும் என நினைக்க சொல்லுகின்றனர்..

இப்படி கல்லூரிக்காலத்தில் முக்கால்வாசி பங்கை கல்லூரியிலேயே பலவற்றிலும் கழிக்கும் நமது தமிழ் இளைஞர்கள் பலர் கல்லூரி பருவத்தை சாதனைகளின் இனிமையான காலமாக மாற்றாமல் பல பாடங்களில் தோல்வியுற்று முடிக்க முடியாமல் வருந்தி தன்னையும் தன்னை சார்ந்த குடும்பத்தையும் கஷ்டப்படுத்துகின்றனர்..
காலம் போனதும் தான் புரிகிறது இவையெல்லாம் தன்னை பாழாக்கிவிட என பின்னப்பட்ட மேல்தட்டு வர்க்கத்தின் வலைகள் என்று.

வாழ்வியல் உதாரனம் மற்றும் கதாநாயகன் வீரன், தலைவர் போன்ற வார்த்தைகள் உண்மையில் நம்மை இந்த சமுதாயத்தில் அடிநிலை நடுநிலை மேல்நிலை என்ற வர்க்கத்தை ஏற்றுக்கொள்ளவே வலுக்கட்டாயமாக தினிக்கப்படுகிறது.

குறைந்தபடசமாக
உண்மையில் மானவர்களுக்கு வாழ்வியல் உதாரனமாக இருக்க வேண்டிய கதாநாயகர்கள் அவர்களின் ஆசிரியர்களே…(அதனாலோ  என்னவோ கதாநாயகனை வளர்க்க ஆசிரியர்களை படங்களில் மொக்கையாகவும் ,கையாளாகாதவர்களாகவும் வடிவமைக்கிறார்களோ)

தமிழ் மானவர்கள் முதலில் உணர வேண்டியது “முன்னாளில் தன்னை போன்ற ஒரு மானவனே இந்நாளைய ஆசிரியர்…
ஒரு வகையில் முதிர்ந்த மாணாக்கர்”.

அதை போன்று சுமார் 30 வருடங்களுக்கு முன் தமிழகத்தில் அதிகம் தொழில் சார்ந்து இயங்கவில்லை எனவே அக்காலத்தைய படித்த இளைஞர்கள் பலர் கணக்கு வழக்குகளை பார்ப்பதற்கு உதவும் வகையில் பொருளாதாரம் மற்றும் வனிகம் ஆகியவைகளை மட்டும் பெருவாரியாக படித்தனர்.
அவர்களால் பெரிய அளவில் தனித்தியங்க வாய்ப்புகள், இன்று இருப்பதை போல் இல்லை, மேலும் அலுவலகத்தில் அத்தகைய பணிகளை பார்க்கும் வேலை ஆட்களின் எண்ணிக்கை குறைவு (தகுதியான வேலையும் அரிதாகவே கிடைத்தது)அதனால் படித்த இளைஞர்கள் பலரே படிப்பை ஒரு பொருட்டாக நினைக்காமல் இருந்தனர்…

இன்றோ பொறியியல்  கணிணி , ஊக  வனிகம் , ஊக வர்த்தகம்  மின்னனுவியல் என படிப்புகள் அதிகம்…இன்று ஒவ்வொரு மானவனும் இத்தகைய படிப்புகளை படிப்பதோடு மட்டுமில்லாமல் சமூகத்திற்கு பயன் தர தக்க சாதனங்களையும் முறைகளையும் தயாரிக்கலாம்..இப்படியாக மட்டுமே உழைப்பு என்ற உடல் சார் தினிப்பில் இருந்து விடுபட்டு அறிவுசார் சமூகமாக வாய்ப்பு அனைவருக்கும் கிட்ட இயலும்.

ஒவ்வொரு மானவனும்
நன்றாக கவனித்தால் படங்களில் நடிக்கும் நடிகர்கள் நடுத்தர வர்க்க பொருள்களையே பயன்படுத்துவர் ஏனெனில் அப்பொழுதுதான் இவர்கள் அப்பொருள்களுக்கு விற்பனை முகமாக மாறி நடுத்தர வர்க்கத்தை விட மேலாக வாழ இயலும்.
இந்த அடிப்படையில் தரம் பிரித்தோமேயானால் இன்று நாட்டை திருத்துகிறேன்,அவனை திருத்துகிறேன் மற்றும் இவனை திருத்துகிறேன் என வெற்றுரை கூறும் (நடிகர்) மாந்தர் பலர் விளம்பரம் என்று வரும்பொழுது அதைவிட அக்கரையை விளம்பரதாரரின் வாய்ப்பிற்கும் பனத்திற்கும் தருவதையும் கானலாம்…
ஏனெனில் இவர்கள்தான் தொழிலை மேலும் அரசியல் வரை விரிவாக்கி கொள்கையற்ற கோமாளிகள் ஆதிக்கம் பெற வழிவகுக்கிறார்கள்…
ஆசிரியர்களும் தங்கள் வேலையை சமூக தொன்டாக கருதி இயங்க வேண்டும் மற்றும் தங்களை மனிதர்கள் என்ற விலங்குகளை சிந்திக்க தூண்டும் வினையூக்கிகளாக நினைத்து ஆசிரியர் வேலையை நினைத்தல் வேண்டும்…
ஒரு தெரியாத ஆசிரியரால் 60 சிந்திக்காத மாணவர்கள் உருவாகிறார்கள் அவர்களில் பலரே வாழ வழியின்றி ஆசிரியராகின்றனர் பின்னர் இவர்கள் 3600 மாக்கள் உருவாக காரணமாகின்றனர்…
இப்படி ஆசிரியர் மற்றும் அவரின் குனநலன்கள் எப்படி ஒரு பரந்துபட்ட கூட்டத்தின் வாழ்வியலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்து அனைவரும் செயலாற்ற வேண்டும்….

நமது மக்கள் ஒப்பனை தொழிழாளர்களை சாதனையாளர்களாக நினைத்து ஏமாறுகிறார்கள்…

ஏற்கனவே சாதிய மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளில் சிக்கித்தவிக்கும் இன்றைய தலைமுறையின் குடும்பங்களில் இருந்து வரும் மாணாக்கர்களுக்கு படிப்பு என்பதே ஒரு அரிய வாய்ப்பே இதை புரிந்து கொள்ளாமல் வீனடிக்கப்படுகின்றனர்….

அது இனியேனும் மாற்றம் பெறட்டும்….

___________________________________
திரு.சோழநாடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *