வளர்ச்சி எல்லோருக்கும் சாத்தியாமானதா?

வளர்ச்சி அடைய தான் எல்லோரும் முயற்சிக்கிறோம்..
நன்றாக உழைக்கிறோம்..
காசு என்ற தலையில் கட்டிய கல்லை கண்டு துரத்தும் கண்களாக நாமும் கால்களாக நாமும் எவ்வளவோ ,யாருக்காகவோ ,உண்மையாகவும் உறுதியாகவும் உழைக்கிறோம் …
ஆனால் இது உண்மையில் சாத்தியமா ..?

எல்லோரும் வாழ்க வளர்க என்ற வார்த்தையை கேட்டு தலையசைக்கும் நாம் …அதன் பின்னர் ஒழிந்திருக்கும் ஏமாற்று வார்த்தைகளை பற்றி சிந்திக்க தவறுகிறோமோ என்ற ஐயப்பாடு எழுகிறது..

எங்களிடம் வாருங்கள் இதற்கு அதை செய்கிறோம் ..அதற்கு இதை செய்கிறோம்…
என்று சொல்லும் பல விடயங்கள் நமக்கு சொன்னபடி நடக்கின்றனவா எனில் இல்லை…

ஒருவன் வளர மற்றவன் வீழவே முடியும் இது உலக நியதி அல்ல …

ஆனால்
அவ்வாறு வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது…
இன்னும் சரியாக சொல்ல வேண்டும் எனில் ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டது…

இந்த விதிக்கு உட்படாமல் எதுவும் வளரவோ அல்லது வீழவோ இயலாது.

ஒருவர் பனக்காரராக பல நிறுவனங்களை உருவாக்குகிறார்,இதனால் பயனடைவதாக கூறி சிலரும் அந்த நிருவனத்தால் பாழானதாக சிலரும் இரண்டும் கெட்டான் என சிலரும் கண்டிப்பாக இருப்பார்கள்.
இதை கணிதவியலில் இயற்கை அல்லது சராசரி வளைவு(நார்மல் கர்வ்) என்று குறிப்பிடுவர்.
கிட்டத்தட்ட கோயிலில் உள்ள பெரிய மணியை ஒத்ததாக இருக்கும் இந்த இயற்கை வளைவு பிரபஞ்சம் தொடங்கியது முதலேயே ஆரம்பித்துவிட்டது.
ஏன் பிரபஞ்ச உருவாக்கமே இத்தகைய வடிவமுடைய ஒரு வெடிப்பே ஆகும்.

அருவியில் இருந்து நீர் மேலேயிருந்து கீழேதான் விழும்

அப்படி விழும் நீரும் நடுப்பகுதியில் அதிக அளவிலும் சுற்றுப்புறங்களில் குறைவாகவும் விழும்…
அதைப்போல ஒரு ஊரில் உள்ள மனிதர்களின் சராசரி உயரமானது கீழ்க்கண்ட வகைப்பாடிலேதான் அமையும்
(கம்மியான நபர்கள் மிகவும் உயரமானவராக மற்றும் உயரம் குறைவானவராகவும் நடுத்தரரானவர் அதிக அளவிலும் இருப்பர்)

ஏன் இங்கு இவற்றை விரிவாக குறிப்பிடுகிறோம் எனில் பக்கத்தை நிரப்ப மட்டும் அல்ல
மேற்கண்ட நிகழ்வு எல்லாமே இயற்கை நிகழ்வுகள்.
எவையெல்லாம் இயற்கை நிகழ்வுகளோ அவையனைத்துமே “இயற்கை வளைவு” எனும் கோட்பாட்டை ஒட்டியே நிகழும்.

இப்பொழுது நமது சிந்தனையை சற்றே மக்கள் கூட்டம் எனும் இயற்கை நிகழ்வுகள் நடைபெறும் இடத்தை பற்றி யோசிப்போம்.

மக்கள் எனும் பன்மைய கூட்டத்தில் நடைபெறும் அனைத்துமே இயற்கை நிகழ்வுகள் அதாவது இயற்கை வளைவு விதியை கடைபிடிக்கும் நிகழ்வுகள்.

ஒருவர் இந்த கூட்டத்தில் பனக்காரராக ஆசைப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.அப்படி அவர் ஆவதற்கான வாய்ப்பு குறைவே எனினும் அப்படி நடந்து கொள்ள இயற்கை வளைவு விதியின் அடிப்படையில் உச்சி பகுதியை அடைய வேண்டும அதாவது பலரிடம் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பனமானது அவரிடம் சென்றடைய வேண்டும் அதே சமயம் மற்றவர்கள் அவரிடம் ஏதோ வகையில் பனத்தை இழக்க வேண்டும்.
இந்த படி நிலை பனம் அதிகம் உள்ளவராக இருப்பவரிடத்தில் இருந்து படிப்படியாக பனம் குறைவாக உள்ளவர் வரை நடைபெறுகிறது.
(பில் கேடஸின் கணிணி மென் பொருளை வாங்கும் ஒரு அரசு அதற்காகும் செலவை மக்களின் மீது வலுக்கட்டாயமாக தினிக்கப்படுவது போல)

இதை பற்றி இவ்வளவு விரிவாக விவாதிக்க என அவசியம் உள்ளது.

வளர்ச்சி என்பது ஒரு வேறுபாடு அல்லது வேறுபாட்டு மனநிலை..

இயற்கையாகவே மனித மனம் வேறுபாட்டையே விரும்புகிறது…

பல நிலைகளில் இயற்கையின் மேனடுக்கு மக்களால் பல நேரம் சொல்லப்படும் “எல்லோரம் வாழ்க” ” நாடே வளர வேண்டும்” போன்ற வாக்குறுதிகள் 67.5 சதவிகிதம் பொய்யே…

அப்படியானால் ஒரு நாடு வளரவே முடியாது என்பது அர்த்தமல்ல அப்படி அது வளர மற்ற நாடுகளை சுரண்டித்தான் அப்படி ஆகுதல் இயலும் என்பதுதான் உண்மை…

எனவே இனிமேல் இது போன்ற வாக்கியங்களை நீங்கள் கேட்க நேர்ந்தால் சந்தோசப்படுங்கள் அதே சமயம் அந்த வார்த்தைகள் உங்களுடை பனப்பையை குறிவைப்பதை குறித்து சற்றே எச்சரிக்கையாகவும் இருங்கள்…

___________________________________
திரு.சதவீதன்

(ஆதி பகலவன் முதற்றே உலகு)

..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *