இட உரிமையா (அ) இட ஒதுக்கீடா

சில வார்த்தைகள் பலருக்கு நினைத்து பார்க்க முடியாத அளவு மனமாற்றங்களையும் மனத்தாழ்வுகளையும் ஏற்படுத்திவிடுகிறது.

உதாரணத்திற்கு திருநங்கைகளை முன்பு அலி என்றும் 9 என்றும் கூறுவதை பல சமயம் கண்டிருக்கலாம்…
ஏன் அரசாங்கமே கூட பல நேரங்களில் இத்தகைய சார்புடைமை மனப்போக்கை ஆதரிக்கும் விதமாகவே பல்லான்டுகள் இருந்துள்ளது.
அவர்களை தீன்டப்படக்கூடாத காட்சி பொருள்கள் என ஒதுக்கி பார்க்கும் மனநிலையை வேண்டும் என்றே திரை துறையும் பல படங்களின் வாயிலாக மக்களின் மனதில் எழும் கொஞ்ச நஞ்ச குற்ற உணர்வையும் மறக்க வைத்தன.
இப்படி பெரும் போக்கான மக்களின் மனோநிலை செயற்கையாக வளர்த்தெடுக்கப்படுகிறது.
மக்களும் கிட்டத்தட்ட ஆடு மாடுகளென சில சமயம் இத்தகைய வெளிமட்ட மனநிலைகளில் தங்கள் கைகளால் தங்களின் கண்களை குத்தி கொள்கின்றனர்.
அவ்வாறான மயக்க நிலையில் மக்களும் சில பல சொற்களின் அர்த்தத்தை உணராமலே ஏற்று கொண்டு விடுகின்றனர்.

அப்படி பட்ட மற்றுமொரு வார்த்தைதான் இட ஒதுக்கீடு என்ற வார்த்தையும்.

இட ஒதுக்கீடு என்ற வார்த்தை ஏதோ எதையோ வேண்டா விருப்பாக போனால் பிழைத்து போகுது என்று பிச்சையிடுவது போன்ற அர்த்தத்தில் ஒதுக்குகின்ற வகையில் உள்ளது.
இங்கிருந்தே அடிமை மனநிலை மக்களிடம் வளர்த்தெடுக்கப்படுகின்றது.

மக்கள் அனைவருமே அரசாங்க நிதி வழங்கலில் (வரி) பங்கு பெறுகின்றனர்.அதை பெற்றுக்கொண்ட அரசு குடிகளுக்கான குடிமை பனிகளை செய்ய கடமைப்பட்டது.
இங்கு வரி வருவாயை பெறுவதால் அரசாங்கம் சிறுமை அடைவதில்லை.
அப்படி இருக்கும்போது எப்படி அரசாங்க அலுவல்களில் சமமாக பங்கேற்க உரிமையுள்ள (ஏன் கடமையும் உள்ள) அதன் குடிகள் அடைய வேண்டிய இட உரிமையை எப்படி சிறுமை படுத்தி இட ஒதுக்கீடு என்று குறிப்பிட இயலும்.
இத்தகைய வார்த்தைகளில் இன்னும் கூட தெளிந்த மனநிலையை அடையலாம்.

சட்டங்களும் விதிகளும் அவை ஆரம்பிக்கும் புள்ளியில் இருந்தே திருந்திய நிலையை அடைய வேண்டும்.

இட உரிமையானது வேறுபாடு என்ற ஒன்று மக்களின் மனங்களில் இருந்து நீங்கும் வரை கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்று.

..அனைவருக்குமானதே அரசு…

________________________________
…வசவி விரிவதே அறிவு…
திரு.சோழநாடன்

அறிவியலே எம் (சம்)மதம்

அறிவியல் என்ற ஒன்று இந்திய சமூகங்களில் எவ்வாறு எல்லாம் திறிக்கப்படுகிறது
என்று பார்ப்போம்…அறிவியலானது
ஆரம்பத்தில் இருந்தே மதத்தின் ஊடாகவே இருக்கச்செய்ய பட்டுள்ளது.
ஒரு காலத்திலும் மதம் என்கிற வட்டத்தை விட்டு வெளியே நடமாட அனுமதிக்கப்படவில்லை…
இதை ஒத்த மனப்பான்மையில்தான் ஐரோப்பி தேசங்களும் சில நூற்றான்டுகளுக்கு முன்னர் இருந்தனர்.
ஆனால் அவர்கள் எல்லாம் அத்தகைய மயக்கத்தில் இருந்து முன்பே விடுபட்டு விட்டனர்.அறிவியலை தனி என்றும் மதவியலை தனி என்றும் பிரித்துனர தலைப்பட்டனர்.ஆனால் நம்மவர்களோ அப்படியின்றி பின்னவினத்துவமாக அதையே பெறுமை என கொன்டாடுகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்னர் திருமதி கல்பனா சாவ்லா போன்றோர் வின்வெளியை அடைந்து சாதித்தனர்.அவர் அன்று முக்கியமான ஒன்றை உலகிற்கு அறிவித்தார்…அதாவது அவர் இந்தியர் ,அமெரிக்கர் என்று சிறு வட்டத்திற்குள் குறுக்கிக்கொள்ள விரும்பவில்லை என்றும் தான் “அறிவியல் என்ற ஒன்றையே அனைத்தாகவும் கருதுபவள் ” என்றும் அறிவித்தார்..இது அப்போதைய இந்தியர்களுக்கு மன்ககசவை ஏற்படித்தினாலும் உண்மை அதுதானே என்பதை உணர மறுக்கிறோம்…

அறிவியல் ஒன்றையே தன் நாடாகவும் தன் மதமாகவும் கருதியதாலேயே அறிவியலின் உச்சிப்புள்ளியை முகர அவரால் முடிந்தது….
சலனமற்ற வெற்று வெளியை உணர முடிந்தது…

அத்தகைய பரந்த அறிவியல் மனதை கொள்ளாததால் தான் இன்றைய இளைய தலைமுறைகள் சிலர் படித்திவிட்டு இங்கேயே கடமை செய்ய போவதாக நினைத்து ஏமாறுகின்றனர்.
இவர்களின் பரந்த மனப்பான்மையையோ அதில் உள்ள நல்ல தன்மையை குறித்து குற்றமில்லை …
இருப்பினும் இத்தகைய படித்த ஆசாமிகளுக்கான வேளை அங்கீகரிக்க படுவதில்லை…

எனக்கு தெரிந்து பல உயர் தொழில்நுட்பங்களை ஒருவர் விரும்பி முதுகலையாக பயின்றார்…அவரிடம் படித்து முடிக்க போகும் காலத்தில் கேட்ட போது …அவர் தமது நாட்டிற்காக பனியாற்ற போவதாக கூறினார்…

படித்து முடித்துவிட்டு அவரை அனுகியபோது அவர் நிலமையோ வேறாக இருந்தது..

இளங்கலையில் ஒன்று முதுகலையில் வேறொன்று என படித்ததால் அவரை அரசு நிறுவனங்கள் கிராஸ் மேஜர் என்று அவருக்குறிய அங்கீகாரத்தை தர மறுத்துவிட்டனர்…சரி தனியாரிடம் செல்லலாம் என்றால் அவரது கிராஸ் மேஜருக்கான தேவை இன்று இல்லை என்று கூறி அவரை தொழில்சார் நிறுவனங்களில் வேலைக்கு எடுக்கவில்லை..

இப்படி வாலிபத்தில் படத்தை பார்த்து வீராவேச கருத்துகள் என்று நினைத்து போதையை தலைக்குமேல் ஏற்றி மேலான முன்னேற்றங்களை அடைய இயலாமல் தவிக்கின்றனர் நம்மில் உள்ள சில இளைய தலைமுறையினர்…

இப்படி காலத்தில் தமது இளக்குகளை அடைய இயலாது இளமையை வீனாக பேசி ஆத்தி பின்னர் எல்லாம் முடிந்ததும் ஏதோ ஏழைக்கு ஏற்ற வேலை என வெந்ததை தின்ன இயலும் இயலா மனநிலைக்கு உள்ளாகின்றனர்….

எனவே கல்பனா சாவ்லா போன்றோரது தெளிவான மனநிலையை நம்மக்கள் அடைய வேண்டும்…
அறிவியல் வேறு ..மதம் வேறு…என்பதை தெளிவுற ஏற்று …அறிவியலை முழுதாக ஏற்று ஒவ்வாததை முழுதாய் புறந்தள்ள வேண்டும் அப்போதுதான் நமது தமிழ் சமுதாயம் தழைக்க இயலும்…

எல்லா திசைகளிலும் சென்று அறிவியல் தெளிவாக கற்று தேர்ந்து …மக்களுள் தமிழ் மக்கள் போல் கணியோர்,பொறியோர்,வலியோர்,பெரியோர்,அறிவுடையோர் எவருமிலர் என்ற இடத்தை அடைய உறுதி கொள்ளல் வேண்டும்…

மேலும் நம்மவர் அனைவரும் யாதும் ஊரே யாவரும் கேளீர்..என்று உலகுக்கு உறைக்க வேண்டும்….
___________________________________
திரு.சம்புகன்
…வசவி விறிவதே அறிவு…