இட உரிமையா (அ) இட ஒதுக்கீடா

சில வார்த்தைகள் பலருக்கு நினைத்து பார்க்க முடியாத அளவு மனமாற்றங்களையும் மனத்தாழ்வுகளையும் ஏற்படுத்திவிடுகிறது.

உதாரணத்திற்கு திருநங்கைகளை முன்பு அலி என்றும் 9 என்றும் கூறுவதை பல சமயம் கண்டிருக்கலாம்…
ஏன் அரசாங்கமே கூட பல நேரங்களில் இத்தகைய சார்புடைமை மனப்போக்கை ஆதரிக்கும் விதமாகவே பல்லான்டுகள் இருந்துள்ளது.
அவர்களை தீன்டப்படக்கூடாத காட்சி பொருள்கள் என ஒதுக்கி பார்க்கும் மனநிலையை வேண்டும் என்றே திரை துறையும் பல படங்களின் வாயிலாக மக்களின் மனதில் எழும் கொஞ்ச நஞ்ச குற்ற உணர்வையும் மறக்க வைத்தன.
இப்படி பெரும் போக்கான மக்களின் மனோநிலை செயற்கையாக வளர்த்தெடுக்கப்படுகிறது.
மக்களும் கிட்டத்தட்ட ஆடு மாடுகளென சில சமயம் இத்தகைய வெளிமட்ட மனநிலைகளில் தங்கள் கைகளால் தங்களின் கண்களை குத்தி கொள்கின்றனர்.
அவ்வாறான மயக்க நிலையில் மக்களும் சில பல சொற்களின் அர்த்தத்தை உணராமலே ஏற்று கொண்டு விடுகின்றனர்.

அப்படி பட்ட மற்றுமொரு வார்த்தைதான் இட ஒதுக்கீடு என்ற வார்த்தையும்.

இட ஒதுக்கீடு என்ற வார்த்தை ஏதோ எதையோ வேண்டா விருப்பாக போனால் பிழைத்து போகுது என்று பிச்சையிடுவது போன்ற அர்த்தத்தில் ஒதுக்குகின்ற வகையில் உள்ளது.
இங்கிருந்தே அடிமை மனநிலை மக்களிடம் வளர்த்தெடுக்கப்படுகின்றது.

மக்கள் அனைவருமே அரசாங்க நிதி வழங்கலில் (வரி) பங்கு பெறுகின்றனர்.அதை பெற்றுக்கொண்ட அரசு குடிகளுக்கான குடிமை பனிகளை செய்ய கடமைப்பட்டது.
இங்கு வரி வருவாயை பெறுவதால் அரசாங்கம் சிறுமை அடைவதில்லை.
அப்படி இருக்கும்போது எப்படி அரசாங்க அலுவல்களில் சமமாக பங்கேற்க உரிமையுள்ள (ஏன் கடமையும் உள்ள) அதன் குடிகள் அடைய வேண்டிய இட உரிமையை எப்படி சிறுமை படுத்தி இட ஒதுக்கீடு என்று குறிப்பிட இயலும்.
இத்தகைய வார்த்தைகளில் இன்னும் கூட தெளிந்த மனநிலையை அடையலாம்.

சட்டங்களும் விதிகளும் அவை ஆரம்பிக்கும் புள்ளியில் இருந்தே திருந்திய நிலையை அடைய வேண்டும்.

இட உரிமையானது வேறுபாடு என்ற ஒன்று மக்களின் மனங்களில் இருந்து நீங்கும் வரை கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்று.

..அனைவருக்குமானதே அரசு…

________________________________
…வசவி விரிவதே அறிவு…
திரு.சோழநாடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *