தமிழில் புது சங்கங்கள்…

தமிழில் பல புது வகை சங்கங்கள் தேவைப் படுகிறது….
அவை பழையன சேகரித்தல் புதியன புகுத்தல் என நூலகாக்கங்களை கொண்டும்…தற்காலத்திற்கு உகந்த வகையில் இணைய வகையை கொண்டதாகவும் இருத்தல் நலம்…

அத்தகைய தமிழ் வலைகள் சில
பற்றி இங்கு காணலாம்…

1)உங்களுக்கு தமிழ் மீது தனியாத பற்றா …? தமிழ் …தமிழ் ..என்று வெறும் கதறுவதோடு நில்லாமல் பல தமிழ் நூல்களை தேடி இலவசமாக படிக்க விறும்புகிறீர்களா…?
அப்படி படிக்க முனையும் போது பல பழைய நூல்களின் அர்த்தம் விலங்காமல் பாதியிலேயே விடுவதுதான் உங்களுக்கு எழக்கூடிய முதல் பிரச்சினை…எனவே பாடல்களுக்கான உரை இருக்கும் போது தமிழ் சுவையை உணர்வதில் உங்களுக்கு தடை ஏதும் இருக்காது…
அப்படி தமிழின் பல இலக்கியங்களை உரையுடன் இலவசமாக படிக்க சேவையாற்றும் ஒரு இணையமே
கீழ்க்கானும் இணையம்….

Www.tamilvu.org

2)தமிழின் கலம் கண்ட மற்றும் கலம் காணாத தமிழ் எழுத்தாளர்களின் பல வகை கதை,கவிதை மற்றும் வேறுபல படைப்புகளை படிக்க ஆசையா
இவைகளுக்கான ஒரு மீப்பெறு களஞ்சியம்தான் கீற்று தளம்…இவர் அவர் என எவரையும் விட்டு வைக்காது தமிழ் எழுத்தாளர் பல்லாயிர கணக்கானோரின் படைப்புகளின் குவியலே கீற்று இணையதளம்…

பல ஆக்கங்களை இலவசமாக பதிவிரக்கம் செய்ய இயலும்….
உங்களில் பலர் இத்தகைய தளங்களை வாசித்திருக்க கூடும்…

இணைய முகவரி…

Www.Keetru.com

3) எதை பத்தி பேசினாலும் அதைப்பற்றிய பொருளாதார பார்வையை பெற வேண்டுமானால் அத்தகைய விடயங்களை முதலில் என்ன என்று தெளிய வேண்டும்…சிலர் அரை குரையாக தெரிந்து கொண்டு தனக்கு புகட்டப்பட்டவாறு பேசி கொண்டிருப்பார்கள்…

உதாரணத்திற்கு …
கமல் உலக நாயகன் என்று படத்தில் தன்னை நோக்கிய பாடல்களை வைத்து பாடி ஆடும் போது…அதை பார்த்து கைதட்டி விசிலடிக்கும் ஒருவன் கமலின் நடிப்பு திறத்தை பற்றிய பேச்சு வரும் போது தன் சக நண்பனிடம் விவாதிக்கும் போது என்ன சொல்ல நேறும்…..

கமல் ஒரு உலக நாயகன் என்று எடுத்த எடுப்பிலேயே பட்டம் கொடுத்து விடுவார்…மறுபேச்சுக்கே இடம் இல்லை…ஆக கமலுக்கு இங்கு கொடுக்கப்பட்ட பட்டமானது கமலுடைய படம் கொடுத்ததா அல்லது அவர் ரசிகர் கொடுத்ததா என்பது சற்று சிந்திக்க வேண்டிய ஒன்று…

இங்கு தமிழிசையை புனரமைத்த இளையராசாக்களும் புத்தாக்கம் செய்த ரகுமான்களும் …

படத்திற்கான புது இலக்கனத்தை படைத்த பாரதிராசாக்களும்…பல்துறை நிபுனர் ராசேந்தரையும் இன்றளவில் பல ஊடகங்கள் நக்கலாக எழுத அதையே உண்மை என நம்பி தன் நன்பனிடம் சரி என வாதிடும் நவீன ரசிகர்கள் பலர் உள்ளனர்..

இவர்களை போல் அல்லாது பல வகையான சமூக, பொருளாதார மற்றும் உலகளாவிய பிரச்சினைகளை பற்றி நன்கு விளக்கி அவற்றுக்கான பொருளாதாரம் சார்ந்து சரி மற்றும் தவறுகளை ஏறக்குறைய எல்லா பிரச்சினைகளையும் புரட்சி ஒன்றையே தீர்வென வைத்து எழுதித்தள்ளும் மார்க்சிய லெனினிய என்று கூறும் ஒரு தளம்தான்….வினவு…

ஆனால் வினவு தளத்தை பொருத்தவரை ஒரு வரியல் சொல்ல வேண்டும் என்றால்…அவர்களிடம் உலகளாவிய பார்வைகளும் உலகளாவிய சிந்தனைகளும் உள்ளது…

இருந்தாலும் அவர்களின் ஒரே குறை என்று அதை படித்து தீவிர ரசிகராகி கைவிடும் பலரும் கூறுவது என்னவெனில் …

அவர்கள் ஒரு பிரச்சினையை குறித்து எழுதி பல வசவுகளை பதிவார்கள் …
அதை படிக்கும் வாசகர்களும் அதை முழுமையாக நம்பி எல்லாவற்றை பற்றியும் தெரிந்து கொதித்து எழுவார்கள்…

சரி அதே வேகத்தோடு ஒன்று சேறும் வினவர்களுக்கு வினவு தளம் கூறும் பதில் என்ன..?

வாங்க தோழர் புரட்சி செய்வோம்…
என்னைக்கு…? என்று கேட்டால் ..
பொறுங்க தோழர் கூடிய சீக்கிரம் புரட்சி வருது …இந்தா வரப்போவுது…கண்டிப்பா வந்துடும்னு ஆரூடம் கூட சொல்வார்கள்….
புரட்சி வராதுன்னு அவர்களுக்கும் தெரியும்…அதை படிக்கும் வினவர்களுக்கும் நன்றாக தெரியும்…
இருந்தாலும் நிறைய நம்மை சுற்றி நடப்பவைகளை தெரிந்துகொள்ள ஒரு நல்ல ஏடு என்றால் வினவை குறைத்து மதிப்பிட முடியாது…

இணைய முகவரி:
Www.vinavu.com

4)தமிழில் பல அரசுடமையாக்கப்பட்டுள்ள நூல்களை முதன் முதலில் மின்னாக்கம் செய்த பெறுமை புராஜெக்ட் மதுரை என்று அழைக்கப்பெறும் தமிழ்நாடு அரசு இணைய தளத்திற்குத்தான் சேறும்…

எல்லா நூல்களையும் பதிவிறக்கம் செய்யலாம் …
பெறும்பாலான ஆன்டிராய்டி அலை பேசிகளில் பதிவிரக்கி அந்த நூல்களை படிக்க இயலும்….

இணைய முகவரி:

Www.projectmadurai.org

இதைத்தவிர சவுக்கு போன்ற இணைய தளங்களும் உள்ளது….

உங்களிடம் இப்படி சிறந்த தளங்கள் வேறுசில இங்கு விடுபட்டிருந்தால் இங்கு குறிப்பிடலாம்….

இப்படிக்கு
______________________________________
வசவு….

பின்லாந்தின் கல்வி முறை

கடந்த இதழில் “போட்டியும் பொறாமையை போன்றி ஆபத்தே” என்று பார்த்தோம்  
அதே சிந்தனையுடன் வலைகளில் உலாவும் போது இத்தகைய மின்னிதழை காண நேர்ந்தது.
போட்டி,வியாபாரக்கல்வி,அரசாங்க கூட்டு,முதுகெலும்பொடிக்கப்பட்ட ஆசிரியர்கள் ,மந்தைகளாக ஆக்கப்பட்ட மாணவர்கள் என புறச்சூழல்களுக்கு மத்தியில் பின்லாந்தின் கல்விமுறை அப்படியே என்னை இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

இது குறித்த செய்தி
குமரிநாடு என்னும் இணையத்தில் படிக்க நேர்ந்தது…

வசவர்களுக்காக  இங்கு பகிறப்படுகிறது….

——————————————————————————————————————————–
அப்படி என்னதான்இருக்
கிறது பின்லாந்து கல்வி முறையில்? உலக
அளவில் ‘கல் வியின் உச்சம்’ படித்துப்
பாருங்கள்.
உலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என
அழைக்கப்படுவது பின்லாந்து். அமெரிக்க,
ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில்
எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும்,
அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான
டாலர் என்ற மந்திரித்த
தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால்
கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட
முடியவில்லை.
‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும்
மேம்பாட்டுக்கான அமைப்பு’ (OCED- organisation
for economic co-operation and development)
என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின்
கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள்
நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த
ஆய்வு அவ்வப்போது நடைபெறும்.
இதற்கு PISA-Programme for international students
assessment என்று பெயர்.
மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில்
சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வில் உலகின்
மற்ற நாடுகள் பின்வரிசையில் இருக்க…
பின்லாந்து எப்போதும்
முன்வரிசையிலேயே இடம் பிடிக்கிறது.
அப்படி என்னதான்
இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?
பின்லாந்தில் ஏழு வயதில்தான்
ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத்
தொடங்குகிறது. ஒன்றரை வயதில்
ப்ளே சுகூல், இரண்டரை வயதில் ப்ரீ-கே .சி.,
மூன்று வயதில் எல்.கே.சி., நான்கு வயதில்
யு.கே.சி என்ற சித்ரவதை அங்கே இல்லை.
கருவறையில் இருந்து வெளியில்
வந்ததுமே குடுகுடுவென
ஓடிச்சென்று பள்ளியில்
உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும்
அவர்களுக்கு இல்லை. எல்லா நேரமும்
கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும்
குழந்தையின் சின்னஞ்சிறு மூளை,
தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில்
இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும்
கற்கிறது. இலை உதிர்வதும்,
செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும்,
பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்.
இவற்றில்
இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள்
நடுவதால், அறிவு அதிவேக
வளர்ச்சி அடையும் என
எண்ணுவது மூடநம்பிக்கை.
ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும்
பின்லாந்து குழந்தை, அடுத்த
மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின்
பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம்
செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை.
ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும்
குறைவுதான். அந்த நேரத்திலும்கூட,
படிப்புக்குக் கொடுக்கப்படும்
அதே முக்கியத்துவம் இசை, ஓவியம்,
விளையாட்டு, மற்றும் ஆய கலைகள் ௬௪ (64)
க்கும் முக்கியத்துவம் உண்டு.
ஒவ்வொரு பள்ளியிலும் ஓர்
ஓய்வறை இருக்கும். படிக்கப்
பிடிக்கவில்லை அல்லது சோர்வாக
இருக்கிறது என்றால், மாணவர்கள்
அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்.
முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற
தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது;
பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம்
கையெழுத்து வாங்கி வரச் சொல்லும்
வன்முறை கிடையாது. தங்கள் பிள்ளையின்
கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள
வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால்,
தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப்
பெற்றுக்கொள்ளலாம்.
1. கற்றலில் போட்டி கிடையாது என்பதால்,
தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன
உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை.
2. சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக்
கருதும் மனப்பாங்கும் இல்லை.
3. இவர்களுக்கு வீட்டுப்பாடம்
தரப்படுவது இல்லை.
4. மாணவர்களுக்கு எந்தப் பாடம்
பிடிக்கிறதோ அதில்
இருந்து அவர்களே வீட்டுப்பாடம்
செய்து வரலாம்.
5. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர்
இருப்பார். அவர், மாணவர்களின்
உடல்நிலையை தனிப்பட்ட முறையில்
கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்.
6. ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள்
இருக்கலாம்; அதற்கு அதிக
எண்ணிக்கை கூடவே கூடாது.
7. முக்கியமாக பின்லாந்தில் தனியார்
பள்ளிக்கூடமே கிடையாது.
அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின்
வசம். கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர
வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக
இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும்
ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும். ‘என்
பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல
படிக்கிறா’ என சீன் போட முடியாது.
அனைவருக்கும் சம தரமுள்ள
கல்வி அங்கு உத்தரவாதப்படுத்தப்பட்டு உள்ளது.
அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம்
குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப்
பெற்றுவிடுகின்றனர்.
A. அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச்
செல்கின்றனர். ‘டியூஷன்’ என்ற அருவருப்பான
கலாசாரம், அந்த
நாட்டுக்கு அறிமுகமே இல்லை.
B. தேர்வுகளை அடிப்படையாகக்கொள்ளாத
இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும்
மாணவர்கள்தான், உலகளாவிய அளவில்
நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல்
இடங்களைப் பிடிக்கின்றனர்.
இது எப்படி என்பது கல்வியாளர்களுக்கே புரியாத
புதிர். அந்தப் புதிருக்கான விடையை,
ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது.
C. உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும்
குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை,
ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும்
வெளியிடுகிறது. இதில்
பின்லாந்து எப்போதும் முன்னணியில்
இருக்கிறது. மகிழ்ச்சியின் நறுமணத்தில்
திளைக்கும் குழந்தைகள்,
அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர்
எதுவும் இல்லை.
பின்லாந்து கல்விமுறையின் இத்தகைய
சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக,
உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும்,
பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக்
குவிகின்றனர். உலகின் 56 நாடுகளில்
இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர்
ஆண்டும் செல்கின்றனர். நாட்டின் அந்நியச்
செலாவணியில் கணிசமான சதவிகிதம்
கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது.
ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும்
புகழ்மாலைகளை பின்லாந்தின்
கல்வியாளர்களும் அமைச்சர்களும்
ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை.
‘பின்லாந்து கல்விமுறைதான் (Finnish Education
system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல
முடியாது. றிமிசிகி ஆய்வில்
எல்லா நாடுகளும் பங்கேற்காத நிலையில்
இப்படி ஒரு முடிவை வந்தடைய முடியாது.
எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க
முடியும்’ என்கிறார்கள். இல்லாத
நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து,
தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும்
தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில்
இது பண்புமிக்க பார்வை; மதிக்கத்தக்க
மனநிலை.
கல்வியில் இருந்து நாம் பெறவேண்டிய
சாராம்சம் இதுதான். இத்தகைய சிறந்த
கல்விமுறையை உருவாக்கியதிலும்,
பராமரிப்பதிலும் பின்லாந்தின்
ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.
சொல்லப்போனால்
பின்லாந்து ஆசிரியர்கள்தான்
இதற்கு முழுமுதல் காரணம். பின்லாந்தில்
ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எசு.,
ஐ.பி.எசு போல மிகுந்த சமூகக் கௌரவம்
உடையது. அரசின் கொள்கை வகுக்கும்
முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில்
ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.
மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு,
ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம்.
அதே நேரம் அங்கு ஆசிரியர்
ஆவது அத்தனை சுலபம் அல்ல!
மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும்
மாணவர்களில் இருந்து ஆசிரியர்
பயிற்சிக்கு மாணவர்கள்
தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள்
உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும்
பயிற்சி எடுக்க வேண்டும். பிறகு, ஆறு மாத
காலம் ராணுவப் பயிற்சி.
ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில்
நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி.
ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட்,
குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில்
பங்கேற்பது, நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த
தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம்
இருந்து சான்றிதழ், தீயணைப்பு, தற்காப்புப்
பயிற்சி, முதலுதவி செய்வதற்கான
மருத்துவச் சான்று… என ஆசிரியர்
பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச்
செலவிட வேண்டும்.
இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில்
பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத
முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும்
மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!
பாடம் படிப்போம் தாய்மொழி வழிக் கல்விப்
பயிலும் பின்லாந்து போராளிகளிடம்…
நன்றி
-சே.க. அருண் குமார் –
நன்றி
——-********—————————————-
குமரிநாடு மின்னிதழ்
( kumarinadu.net/index.php?option=com_content&view=article&id=7934:2015-01-04-07-59-58&catid=39:2009-09-10-17-48-24&Itemid=27)

போட்டியும், பொறாமையை போன்று ஆபத்தே

பல நேரங்களில் சிலர் சொல்ல நாம் கேட்டிருப்பதுதான் போட்டி இருக்கலாம் ஆனால் பொறாமை கூடாது…என்று

அங்குதான் கிட்டத்தட்ட அனைத்துமே ஆரம்பமாகிறது.
அனைத்தும் என்றால் அனைத்து சரிகளும் மற்றும் அனைத்து தவறுகளும்.

போட்டியானது இன்றைய பெறுநிறுவனங்கள் மற்றம் அனைத்து அமைப்பு ரீதியினராலும் ஏமாற்றத்தையும் கூட்டத்தையும் திசை திருப்பும் ஒரு அற்புதமான கருவி.

உண்மையில் கெட்ட எண்ணமாக வண்ன படுத்தப்படும் பொறாமை கூட ஒரு வகையில் ஏற்றுக்கொள்ள தக்க குனமாகும்.

ஏன் எனில் அதை உடனே வெளிப்படுத்தி விட்டால் பெரிய பாதிப்பு ஏற்படாது.

ஆனால் போட்டியே அனைத்து மனத்தாங்கள்களின் பிறப்பிடமாக திகழ்கிறது.

போட்டி என்ற ஒன்றின் மூலம் ஆசை அதனூடே பேராசை ,வெறி,அழுத்தம்,இயந்திரத்தன்மை மற்றும் நுகர்வு கலாசாரம் என அனைத்தும் நம்மூடே நம்மை அறியாமல் விதைக்கப்படுகிறது..

ஏழ்மையை ஏற்றுக்கொள்ளவும்
நிலையின்மையை ஏற்றுக்கொள்ளவும் என போட்டி நமக்கு கற்று கொடுக்கும் பாடங்கள் ஏராளம்…

எங்கெல்லாம் இயந்திரத்தன்மையால் இதயம் இறுகிப்போன மக்கள் உள்ளனரோ அங்கு போட்டி என்ற ஒன்று சிந்தனைக்கு அப்பாற்பட்ட உயரிய நிலையை அடைகிறது…

இதனால் போட்டியின் தீமையான இயல்புகளை குறித்து மக்கள் சிந்திக்க கூட மறுத்து விடுகின்றனர்…

குழந்தை பருவத்தில் போட்டி கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியது…

ஒரு பாட்டு போட்டியில் கலந்து கொள்ள வரும் ஒரு தமிழ் குழந்தையை நமது எ.கா ஆக கொள்வோம்…

அந்த குழந்தை சுமாராக கருதப்படும் ஒரு குரளில் போட்டியில் பாடி விடுவதாக வைத்துக்கொள்வோம்…

குழந்தைகள் அனைவருமே போட்டியில் வெற்றி பெற போவது இல்லை
..
மூன்று இடங்களை தவிற அனைத்துமே தோற்ற பெறும்பான்மை குழந்தைகளுக்கே..

அப்படி தோற்கும் பெறும்பான்மை குழந்தைகளின் மன ஓட்டம் எப்படி இருக்கும்…

அதன் மனநிலையில் இருந்து சிந்திக்க தொடங்கினோமானால் பாட்டு போட்டியில் கலந்து கொண்டால் தனது பாடல் வளத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற துளிர் ஆசையுடன் போட்டியில் கலந்து கொள்ளும்…
தொலைக்காட்சியில் தன்னை காட்டுவார்கள்…
ஆனால் தோற்றுவிட்டால் தொலைக்காட்சி வரை சென்று தான் அவமானப் படுத்தப்பட்டதாகவும் தான் பெறும் பகுதி சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டதாகவும் தன்னை தன்னுடைய நன்பர்கள் இதையே சொல்லி தனது பாடல் வளத்தை நகைக் கூடும்…தனது ஆசிரியர்கள் புறக்கனிப்பட்ட ஒரு பொருளாக நடத்த கூடும் என ஏகப்பட்ட அழுத்தங்கள்  அக்குழந்தையின் மனதில் ஏராளமான ஆராத வடுவை ஏற்படுத்தி விடுகிறது…

இப்படி ஏராளமான மனத்தாங்கள்களை குறித்து சிந்திப்பதால் வெட்கத்தில் பல சிறு குழந்தைகள் அழுத்தம் தாழாது மேடையிலேயே அழுது விடுவதை பல நேரங்களில் தொலைக்காட்சிகளில் நம்மில் பலரும் கண்டிருக்க கூடும்…

போட்டிகள் பெறும்பாலான குழந்தைகளின் மனதை அழுத்தி அவர்களின் திறனை குறைத்துவிடுகிறது…

போட்டிகள் திறனறிவதற்காக என சொல்லப்பட்டாலும் பெறும்பாலான போட்டிகளின் வடிவங்கள் முடிவில் பெறும்பான்மை மக்களை சிறுமை படுத்தி திறனை குறைத்து விடுகிறது…

ஒரு குழந்தையின் திறனை மேம்படுத்த நினைக்கும் போது…
அதனிடம் சற்று அக்கறையும் அதன் சின்ன சின்ன ஆசைகளை பெரிதாக அதனிடம் பேசி பாரத்தால் கண்டிப்பாக அதன் திறன் அதிகரிக்க ஆரம்பிக்கும்..

சுவற்றில் கரியால் கிறுக்கும் ஒரு குழந்தையின் கிறுக்கல்களை ஒரு அருமையான ஓவியமாக பாராட்டி அக்குழந்தையை பாராட்டினால் அதன் வரையும் ஆசையும் மற்றும் திறனும் அதிகரிக்கும்..

மாறாக அதே குழந்தையை போட்டியில் கலந்து கொள்ள செய்து தோற்க வைத்து பார்த்தால் …அது எவ்வளவு பெரிய அழுத்தத்திலும் மன அலைவுகளிலும் அல்லல் படுகிறது என்று தெரியும்…

இளைஞர்களிடமும் பல்வேறு விரும்ப தகாத காட்டுமிரான்டி இயல்புகளை போட்டி விதைத்துவிடுகிறது…

வெறி,அழுத்தம்,சகோதரத்தன்மையின்மை,அன்பின்மை,திறங்குறைப்பு என அனைத்தையும் இயல்பில் மனிதர்களாகிய நம்மில் அனைவரிடத்தும் விதைக்கும்…
நம்மை மாக்களாக மாற்ற செய்யும் போட்டி என்ற ஒன்றை இனியேனும் சகோதரத்துடன் நிராகரிப்போம்…..
________________________________________
திரு.மாற்றன்
வசவி விரிவதே அறிவு

இட உரிமையா (அ) இட ஒதுக்கீடா

சில வார்த்தைகள் பலருக்கு நினைத்து பார்க்க முடியாத அளவு மனமாற்றங்களையும் மனத்தாழ்வுகளையும் ஏற்படுத்திவிடுகிறது.

உதாரணத்திற்கு திருநங்கைகளை முன்பு அலி என்றும் 9 என்றும் கூறுவதை பல சமயம் கண்டிருக்கலாம்…
ஏன் அரசாங்கமே கூட பல நேரங்களில் இத்தகைய சார்புடைமை மனப்போக்கை ஆதரிக்கும் விதமாகவே பல்லான்டுகள் இருந்துள்ளது.
அவர்களை தீன்டப்படக்கூடாத காட்சி பொருள்கள் என ஒதுக்கி பார்க்கும் மனநிலையை வேண்டும் என்றே திரை துறையும் பல படங்களின் வாயிலாக மக்களின் மனதில் எழும் கொஞ்ச நஞ்ச குற்ற உணர்வையும் மறக்க வைத்தன.
இப்படி பெரும் போக்கான மக்களின் மனோநிலை செயற்கையாக வளர்த்தெடுக்கப்படுகிறது.
மக்களும் கிட்டத்தட்ட ஆடு மாடுகளென சில சமயம் இத்தகைய வெளிமட்ட மனநிலைகளில் தங்கள் கைகளால் தங்களின் கண்களை குத்தி கொள்கின்றனர்.
அவ்வாறான மயக்க நிலையில் மக்களும் சில பல சொற்களின் அர்த்தத்தை உணராமலே ஏற்று கொண்டு விடுகின்றனர்.

அப்படி பட்ட மற்றுமொரு வார்த்தைதான் இட ஒதுக்கீடு என்ற வார்த்தையும்.

இட ஒதுக்கீடு என்ற வார்த்தை ஏதோ எதையோ வேண்டா விருப்பாக போனால் பிழைத்து போகுது என்று பிச்சையிடுவது போன்ற அர்த்தத்தில் ஒதுக்குகின்ற வகையில் உள்ளது.
இங்கிருந்தே அடிமை மனநிலை மக்களிடம் வளர்த்தெடுக்கப்படுகின்றது.

மக்கள் அனைவருமே அரசாங்க நிதி வழங்கலில் (வரி) பங்கு பெறுகின்றனர்.அதை பெற்றுக்கொண்ட அரசு குடிகளுக்கான குடிமை பனிகளை செய்ய கடமைப்பட்டது.
இங்கு வரி வருவாயை பெறுவதால் அரசாங்கம் சிறுமை அடைவதில்லை.
அப்படி இருக்கும்போது எப்படி அரசாங்க அலுவல்களில் சமமாக பங்கேற்க உரிமையுள்ள (ஏன் கடமையும் உள்ள) அதன் குடிகள் அடைய வேண்டிய இட உரிமையை எப்படி சிறுமை படுத்தி இட ஒதுக்கீடு என்று குறிப்பிட இயலும்.
இத்தகைய வார்த்தைகளில் இன்னும் கூட தெளிந்த மனநிலையை அடையலாம்.

சட்டங்களும் விதிகளும் அவை ஆரம்பிக்கும் புள்ளியில் இருந்தே திருந்திய நிலையை அடைய வேண்டும்.

இட உரிமையானது வேறுபாடு என்ற ஒன்று மக்களின் மனங்களில் இருந்து நீங்கும் வரை கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்று.

..அனைவருக்குமானதே அரசு…

________________________________
…வசவி விரிவதே அறிவு…
திரு.சோழநாடன்

அறிவியலே எம் (சம்)மதம்

அறிவியல் என்ற ஒன்று இந்திய சமூகங்களில் எவ்வாறு எல்லாம் திறிக்கப்படுகிறது
என்று பார்ப்போம்…அறிவியலானது
ஆரம்பத்தில் இருந்தே மதத்தின் ஊடாகவே இருக்கச்செய்ய பட்டுள்ளது.
ஒரு காலத்திலும் மதம் என்கிற வட்டத்தை விட்டு வெளியே நடமாட அனுமதிக்கப்படவில்லை…
இதை ஒத்த மனப்பான்மையில்தான் ஐரோப்பி தேசங்களும் சில நூற்றான்டுகளுக்கு முன்னர் இருந்தனர்.
ஆனால் அவர்கள் எல்லாம் அத்தகைய மயக்கத்தில் இருந்து முன்பே விடுபட்டு விட்டனர்.அறிவியலை தனி என்றும் மதவியலை தனி என்றும் பிரித்துனர தலைப்பட்டனர்.ஆனால் நம்மவர்களோ அப்படியின்றி பின்னவினத்துவமாக அதையே பெறுமை என கொன்டாடுகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்னர் திருமதி கல்பனா சாவ்லா போன்றோர் வின்வெளியை அடைந்து சாதித்தனர்.அவர் அன்று முக்கியமான ஒன்றை உலகிற்கு அறிவித்தார்…அதாவது அவர் இந்தியர் ,அமெரிக்கர் என்று சிறு வட்டத்திற்குள் குறுக்கிக்கொள்ள விரும்பவில்லை என்றும் தான் “அறிவியல் என்ற ஒன்றையே அனைத்தாகவும் கருதுபவள் ” என்றும் அறிவித்தார்..இது அப்போதைய இந்தியர்களுக்கு மன்ககசவை ஏற்படித்தினாலும் உண்மை அதுதானே என்பதை உணர மறுக்கிறோம்…

அறிவியல் ஒன்றையே தன் நாடாகவும் தன் மதமாகவும் கருதியதாலேயே அறிவியலின் உச்சிப்புள்ளியை முகர அவரால் முடிந்தது….
சலனமற்ற வெற்று வெளியை உணர முடிந்தது…

அத்தகைய பரந்த அறிவியல் மனதை கொள்ளாததால் தான் இன்றைய இளைய தலைமுறைகள் சிலர் படித்திவிட்டு இங்கேயே கடமை செய்ய போவதாக நினைத்து ஏமாறுகின்றனர்.
இவர்களின் பரந்த மனப்பான்மையையோ அதில் உள்ள நல்ல தன்மையை குறித்து குற்றமில்லை …
இருப்பினும் இத்தகைய படித்த ஆசாமிகளுக்கான வேளை அங்கீகரிக்க படுவதில்லை…

எனக்கு தெரிந்து பல உயர் தொழில்நுட்பங்களை ஒருவர் விரும்பி முதுகலையாக பயின்றார்…அவரிடம் படித்து முடிக்க போகும் காலத்தில் கேட்ட போது …அவர் தமது நாட்டிற்காக பனியாற்ற போவதாக கூறினார்…

படித்து முடித்துவிட்டு அவரை அனுகியபோது அவர் நிலமையோ வேறாக இருந்தது..

இளங்கலையில் ஒன்று முதுகலையில் வேறொன்று என படித்ததால் அவரை அரசு நிறுவனங்கள் கிராஸ் மேஜர் என்று அவருக்குறிய அங்கீகாரத்தை தர மறுத்துவிட்டனர்…சரி தனியாரிடம் செல்லலாம் என்றால் அவரது கிராஸ் மேஜருக்கான தேவை இன்று இல்லை என்று கூறி அவரை தொழில்சார் நிறுவனங்களில் வேலைக்கு எடுக்கவில்லை..

இப்படி வாலிபத்தில் படத்தை பார்த்து வீராவேச கருத்துகள் என்று நினைத்து போதையை தலைக்குமேல் ஏற்றி மேலான முன்னேற்றங்களை அடைய இயலாமல் தவிக்கின்றனர் நம்மில் உள்ள சில இளைய தலைமுறையினர்…

இப்படி காலத்தில் தமது இளக்குகளை அடைய இயலாது இளமையை வீனாக பேசி ஆத்தி பின்னர் எல்லாம் முடிந்ததும் ஏதோ ஏழைக்கு ஏற்ற வேலை என வெந்ததை தின்ன இயலும் இயலா மனநிலைக்கு உள்ளாகின்றனர்….

எனவே கல்பனா சாவ்லா போன்றோரது தெளிவான மனநிலையை நம்மக்கள் அடைய வேண்டும்…
அறிவியல் வேறு ..மதம் வேறு…என்பதை தெளிவுற ஏற்று …அறிவியலை முழுதாக ஏற்று ஒவ்வாததை முழுதாய் புறந்தள்ள வேண்டும் அப்போதுதான் நமது தமிழ் சமுதாயம் தழைக்க இயலும்…

எல்லா திசைகளிலும் சென்று அறிவியல் தெளிவாக கற்று தேர்ந்து …மக்களுள் தமிழ் மக்கள் போல் கணியோர்,பொறியோர்,வலியோர்,பெரியோர்,அறிவுடையோர் எவருமிலர் என்ற இடத்தை அடைய உறுதி கொள்ளல் வேண்டும்…

மேலும் நம்மவர் அனைவரும் யாதும் ஊரே யாவரும் கேளீர்..என்று உலகுக்கு உறைக்க வேண்டும்….
___________________________________
திரு.சம்புகன்
…வசவி விறிவதே அறிவு…

மஞ்சுவிரட்டு மேற்கத்தியமா?

மஞ்சுவிரட்டு மேற்கத்திய விழையாட்டு என்று அமைச்சர் மேனகா காந்தி தெறிவித்துள்ளார்…

மேலும் அவர் ஜல்லிக்கட்டு இந்தியத்திற்கு எதிரானது என்றும் தெறிவித்துள்ளார்…

தமிழத்தையும்(திராவிடத்தையும்) இந்தியத்தையும் ஒன்று என்று சத்தியம் செய்யும் நமது முனுசாமிகள் சற்று அதிர்ச்சியில்தான் உள்ளனர்…

என்னங்கம்மா இப்படி பன்றீங்களேம்மா என்று வாயிலும் வவுத்திலும் அடித்துக்கொள்ளாத குறையாக அழுதாலும்  முனுசாமிகளுக்கு ஆறுதல் கூறத்தான் ஆழில்லை…

ஏற்கனவே பல வீர விழையாட்டுகளை இழந்துவிட்ட தமிழத்தின் பட்டியலில் மஞ்சுவிரட்டும் சேர்த்தாச்சு…

இப்படி ஏற்கனவே சோகத்தில் சிக்கி தவிக்கும் நமது மக்களின் எறியும் சோகத்தில் எள் நெய் ஊற்றினார் போல் அமைச்சரின் கருத்து அமைந்துள்ளது..

அமைச்சரின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்றாலும் “மனிதர்கள் பொதுக்கருத்தைவிட தங்களின் தனிப்பட்ட கருத்துக்களுக்கேற்பவே செயல்படுவார்கள் என்ற அடிப்படையில்” இதை அவாளின் பொதுக்கருத்தாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும்…

இது போன்ற கருத்துக்களை பொதுமக்கள் சார் பணியில் இருப்பவர்கள் நன்கு சிந்தித்து பொருப்பை உணர்ந்து வெளியிட வேண்டும்…

மக்களுக்காகத்தான் அரசு…
அரசுக்காக மக்கள் இல்லை…
கால்நடைகளை வணங்குவதுதான் நமது பண்பாடு அதை துன்புறுத்துவது நமது பண்பாடல்ல என்று கூறும் திருமதி.மேனகா காந்தி எல்லா மாட்டிறைச்சி சார்ந்த நிறுவனங்களையும் இந்திய பண்பாட்டிற்கு எதிரானது என்று தடை செய்ய ஆவன செய்ய வேண்டியதுதானே…

நிறுவன அமைப்புகளிடம் செல்லுபடியாகாத இவர்களின் பன்பாடும் உணர்வுகளும் தானுன்டு தன் கலை மற்றும் வேலையுன்டு என்று தமிழக இந்திய கட்டுக்கோப்பில் வாழ முயற்ச்சிக்கும் நம் தமிழர்களிடையேதான் செல்லுபடியாகும்…

இதை தமிழக மக்கள் நன்றாக உணர வேண்டும்…எதிர்க்கவும் வேண்டும்…

இப்படிக்கு…
____________________

வசவு
(வசவி விரிவதே அறிவு)

மஞ்சுவிரட்டு

___________________________________
பல நூறு வருடங்களாக நடைபெற்று வந்த மஞ்சு விரட்டு என அழைக்க பெறும் காளைகளை வீரர்கள் அடக்கும் வீர விழையாட்டுக்கு தமிழகத்தில் இருந்து விரட்டு விழா கொண்டாடியாகி விட்டது…

காளைகள் மஞ்சு விரட்டினால் அதிகம் வதைக்கப்படுகின்றன.நோகாத இன்னல்களுக்கு உள்ளாகி மிரண்டு பயந்து மன ரீதியாக மனநோய்க்கு உள்ளாகின்றன.
எனவே மஞ்சு விரட்டு போன்ற கொடூரமான விழையாட்டுகளை அடியோடு மறந்து விட வேண்டும்..

தமிழர்கள்தானே சகிப்புக்கென்றே பேர் போனவர்களாயிற்றே…

முக்கியமாக தமிழர்கள் தமிழ் என்ற வார்த்தையுடன் சேர்த்து எந்த விழாவையும் கொண்டாடிவிடக் கூடாது….

இப்படி மஞ்சு விரட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் என்ன …? உரியடி போன்ற வீர விழையாட்டுக்கள் இருக்கே என்று தடியை தூக்கினீர்களாகில் “தடியை காட்சிப் பொருளாக பயன்படுத்துவதில் இருந்து அதற்கும் விழக்கு அளிக்க வேண்டி வரலாம்…ஏன் எனில் அவைகள் காளைகளை அடிக்க பயன்படுத்தப்படலாம் அல்லவா…

ஏன் எனில் மேற்கண்ட தடைகள் நமக்கு சொல்வது என்ன…

எனக்கு தெரிந்து எங்களது கிராமத்தில் நிறைய எறுதுகள் ஒரு காலத்தில் நிரம்பி இருந்தது…
தயிரும்,மோரும் என தாராளமாக புழங்கிய பொருள்கள் இன்று கிடைத்தாலும் தரமற்றவைகளாக சுவையில் உள்ளது..

கிராமங்களில் தாராளமாக நம்மை போன்றே தாராளமாக வளர்ந்து வந்த பசுக்களும் மற்றும் காளைகளும் சொற்பமாகின காரணங்களை சற்றே அசை போடுவோம் ..

பசுக்கள் (நாட்டு மாடுகள்) சினைப்படவென இருந்த காளைகள் அக்காலத்தில் பசுக்களுக்கு நிகராக பல வகைகளில் பயன்படுத்தி வந்துள்ளோம்..
மஞ்சு விரட்டு,வண்டி இழுத்தல் என பயன்பட்டு வந்த காளைகள் மெல்ல மெல்ல

…மக்களது லாப நோக்கிலான சிந்தனைகளுக்கிடையே சிக்கி கேரளாவிற்கு அடிமாடாக அனுப்பப்பட்டன…

சீமை மாடுகள் என்னதான் அதிக பாலை கரந்தாலும் அவைகளின் குனநலன் பசும்பாலுக்கு குறைந்ததாகவே நம்பப்படுகிறது…

எஞ்சி நின்ற கிராமத்து பசுக்களும் தாங்கள் கூட காளைகள் இல்லாது கால்நடை அலுவலர்களால் சிறப்பாக இனக்கலப்பு செய்யப்பட்டன…

அப்படி இப்படின்னு இத்தகைய பொருளாதார கொள்கைகளால் மறக்கடிக்கப்பட்ட காளைகள் மஞ்சுவிரட்டு போன்ற விழையாட்டுகளின் மூலமாக தங்களது வாழ்நாளை தள்ளிப்போட்டன…

இப்படி பல வழிகள் வைத்து மடக்கினாலும் ….இன்னுமா நீ உயிரோடிருக்க?…என்ற வகையில் அனைவரது முன்னிலையிலுமே காளைகள் டார்வினின் வாழ வழியற்றவைகளின் பட்டியலில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட உள்ளன…

இன்று எங்கள் வீட்டிலேயே பைகளில் அடைக்கப்பட்ட பாலை(?) உண்ண வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுவிட்டது…..

காளைகளை நாம் மறந்தோமா அல்லது அவைகள் நம்மை மறந்துவிட்டனவா…

  தேனீக்கள் அற்பமானவையாக தோன்றினாலும் அவை இல்லாவிட்டால் மகரந்த சேர்க்கையும் அதைத்தொடர்ந்து பூ,காய் மற்றும் கணி அப்புறம் விதை உருவாதல் தடைபட்டு உலகமே பாலையாகிவிடும் அபாயம் உள்ளதாக அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர்…

இப்படி நமது “தமிழ்” முன்னோர்கள் பல வகைகளில் நமக்கு தேவையான விடயங்கள் பலவற்றை ஒவ்வொன்றாய் சிந்தித்து சிந்தித்து உருவாக்கி வைத்துள்ளனர்…

அவைகளில் பலருக்கு சிறியதென படும் “மஞ்சுவிரட்டுக்கு தடை” போன்ற விடயங்கள் பெரிய அளவில் நமது சமூக மற்றும் சிந்தனை ஓட்டங்களில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றன….

…சமூகம் சிந்திக்கட்டும்…

இப்படிக்கு…
___________________________________
திரு.பிழையன்.
(அறியாமையே துண்பத்திற்கு முதல் காரணம்-புத்தர்)

வளர்ச்சி எல்லோருக்கும் சாத்தியாமானதா?

வளர்ச்சி அடைய தான் எல்லோரும் முயற்சிக்கிறோம்..
நன்றாக உழைக்கிறோம்..
காசு என்ற தலையில் கட்டிய கல்லை கண்டு துரத்தும் கண்களாக நாமும் கால்களாக நாமும் எவ்வளவோ ,யாருக்காகவோ ,உண்மையாகவும் உறுதியாகவும் உழைக்கிறோம் …
ஆனால் இது உண்மையில் சாத்தியமா ..?

எல்லோரும் வாழ்க வளர்க என்ற வார்த்தையை கேட்டு தலையசைக்கும் நாம் …அதன் பின்னர் ஒழிந்திருக்கும் ஏமாற்று வார்த்தைகளை பற்றி சிந்திக்க தவறுகிறோமோ என்ற ஐயப்பாடு எழுகிறது..

எங்களிடம் வாருங்கள் இதற்கு அதை செய்கிறோம் ..அதற்கு இதை செய்கிறோம்…
என்று சொல்லும் பல விடயங்கள் நமக்கு சொன்னபடி நடக்கின்றனவா எனில் இல்லை…

ஒருவன் வளர மற்றவன் வீழவே முடியும் இது உலக நியதி அல்ல …

ஆனால்
அவ்வாறு வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது…
இன்னும் சரியாக சொல்ல வேண்டும் எனில் ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டது…

இந்த விதிக்கு உட்படாமல் எதுவும் வளரவோ அல்லது வீழவோ இயலாது.

ஒருவர் பனக்காரராக பல நிறுவனங்களை உருவாக்குகிறார்,இதனால் பயனடைவதாக கூறி சிலரும் அந்த நிருவனத்தால் பாழானதாக சிலரும் இரண்டும் கெட்டான் என சிலரும் கண்டிப்பாக இருப்பார்கள்.
இதை கணிதவியலில் இயற்கை அல்லது சராசரி வளைவு(நார்மல் கர்வ்) என்று குறிப்பிடுவர்.
கிட்டத்தட்ட கோயிலில் உள்ள பெரிய மணியை ஒத்ததாக இருக்கும் இந்த இயற்கை வளைவு பிரபஞ்சம் தொடங்கியது முதலேயே ஆரம்பித்துவிட்டது.
ஏன் பிரபஞ்ச உருவாக்கமே இத்தகைய வடிவமுடைய ஒரு வெடிப்பே ஆகும்.

அருவியில் இருந்து நீர் மேலேயிருந்து கீழேதான் விழும்

அப்படி விழும் நீரும் நடுப்பகுதியில் அதிக அளவிலும் சுற்றுப்புறங்களில் குறைவாகவும் விழும்…
அதைப்போல ஒரு ஊரில் உள்ள மனிதர்களின் சராசரி உயரமானது கீழ்க்கண்ட வகைப்பாடிலேதான் அமையும்
(கம்மியான நபர்கள் மிகவும் உயரமானவராக மற்றும் உயரம் குறைவானவராகவும் நடுத்தரரானவர் அதிக அளவிலும் இருப்பர்)

ஏன் இங்கு இவற்றை விரிவாக குறிப்பிடுகிறோம் எனில் பக்கத்தை நிரப்ப மட்டும் அல்ல
மேற்கண்ட நிகழ்வு எல்லாமே இயற்கை நிகழ்வுகள்.
எவையெல்லாம் இயற்கை நிகழ்வுகளோ அவையனைத்துமே “இயற்கை வளைவு” எனும் கோட்பாட்டை ஒட்டியே நிகழும்.

இப்பொழுது நமது சிந்தனையை சற்றே மக்கள் கூட்டம் எனும் இயற்கை நிகழ்வுகள் நடைபெறும் இடத்தை பற்றி யோசிப்போம்.

மக்கள் எனும் பன்மைய கூட்டத்தில் நடைபெறும் அனைத்துமே இயற்கை நிகழ்வுகள் அதாவது இயற்கை வளைவு விதியை கடைபிடிக்கும் நிகழ்வுகள்.

ஒருவர் இந்த கூட்டத்தில் பனக்காரராக ஆசைப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.அப்படி அவர் ஆவதற்கான வாய்ப்பு குறைவே எனினும் அப்படி நடந்து கொள்ள இயற்கை வளைவு விதியின் அடிப்படையில் உச்சி பகுதியை அடைய வேண்டும அதாவது பலரிடம் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பனமானது அவரிடம் சென்றடைய வேண்டும் அதே சமயம் மற்றவர்கள் அவரிடம் ஏதோ வகையில் பனத்தை இழக்க வேண்டும்.
இந்த படி நிலை பனம் அதிகம் உள்ளவராக இருப்பவரிடத்தில் இருந்து படிப்படியாக பனம் குறைவாக உள்ளவர் வரை நடைபெறுகிறது.
(பில் கேடஸின் கணிணி மென் பொருளை வாங்கும் ஒரு அரசு அதற்காகும் செலவை மக்களின் மீது வலுக்கட்டாயமாக தினிக்கப்படுவது போல)

இதை பற்றி இவ்வளவு விரிவாக விவாதிக்க என அவசியம் உள்ளது.

வளர்ச்சி என்பது ஒரு வேறுபாடு அல்லது வேறுபாட்டு மனநிலை..

இயற்கையாகவே மனித மனம் வேறுபாட்டையே விரும்புகிறது…

பல நிலைகளில் இயற்கையின் மேனடுக்கு மக்களால் பல நேரம் சொல்லப்படும் “எல்லோரம் வாழ்க” ” நாடே வளர வேண்டும்” போன்ற வாக்குறுதிகள் 67.5 சதவிகிதம் பொய்யே…

அப்படியானால் ஒரு நாடு வளரவே முடியாது என்பது அர்த்தமல்ல அப்படி அது வளர மற்ற நாடுகளை சுரண்டித்தான் அப்படி ஆகுதல் இயலும் என்பதுதான் உண்மை…

எனவே இனிமேல் இது போன்ற வாக்கியங்களை நீங்கள் கேட்க நேர்ந்தால் சந்தோசப்படுங்கள் அதே சமயம் அந்த வார்த்தைகள் உங்களுடை பனப்பையை குறிவைப்பதை குறித்து சற்றே எச்சரிக்கையாகவும் இருங்கள்…

___________________________________
திரு.சதவீதன்

(ஆதி பகலவன் முதற்றே உலகு)

..

வேலை

உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்று தேவை வேலை…
நிரந்தர மற்றும் உறுதியான வேலை…
இன்று புற்றீசல் போல் பெருகியுள்ள தனியார் நிருவனங்கள் மற்றும் தனியார் தொன்டு நிறுவனங்கள் பெறும்பாலும் லாபம் ஒன்றையே குறிக்கோள் என கொண்டு இயங்குகின்றன.
இதில் படிப்பை முடித்துவிட்டு வேறு நிரந்தர வழியின்றி வேலைக்கு சேறும் தொழிழாளர்களை ஆசையூட்டி தொழிற்சாலை பூனைகளாக மாற்றி விடும் பெறும்பாலான இத்தகைய நிறுவனங்கள் தங்களையே நம்பியிருக்கும் தொழிழாளர்களை தங்களின் லாபம் அல்லாடும்போது அந்தரத்தில் விட்டுவிடவும் தயங்குவதில்லை…
இளைய பருவத்தில் ரத்தம் துடிப்பாக உள்ளபோது இத்தகைய மாற்றங்களுக்கு தயாராக இருக்கும் தொழிலாளர்கள் தங்களுக்கான வயதும் பொருப்புகளும் அதிகமாகும்போது மிகப்பெரும் வேலையை குறித்த அச்சத்திற்கும் அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர்.

இதனை குறித்து சிந்திக்க இவர்களுக்கு என நாதி இல்லை…

இன்று ஐ.டி துறையிலோ மற்ற பிற தனியார் துறைகளிலோ வேலை செய்யும் தொழிலாளர்களை எவ்வளவோ பிழிந்து வேலை வாங்கும் நிறுவனங்கள் தொழிலே கடவுள் எள்றும் ஞாயம் மற்றும் நேர்மை என்றும் போதிக்கும் இத்தகைய நிறுவனங்கள் பல அதே ஞாயத்தை தொழிலாளர்களின் நலன் என்று வரும் போது மறந்து விடுகின்றன….
இத்தகைய தனியார் கலாசாரத்தில் சிக்கி தவிக்கும் இளைஞர் பலர் தங்களின் வேலைகளை காப்பாற்றிக்கொள்ள அடிமையை ஒத்த மன நிலையுடனேயே வேலை செய்கின்றனர்.
இப்படி குனிந்து குனிந்து வாழ்க்கையின் முழு நீளத்திற்கும் முழு அடிமைகளாக ஆகிவிடுகின்றனர்….
ஒரு பக்கம் வீடு ,குடும்பம் ,கடன் என்று ஒரு பக்கம் வதை படும் இவர்கள் மறு பக்கம் பச்சோந்திகளாகவும்,கூன்களாகவும்,முட்டாள்களாகவும் மற்றும் அடிமைகளாகவும் மாற்றப்படுகின்றனர்..

இந்தியாவில் பெறுகி வரும் தனியார் நிறுவனம் சார்ந்த மனோநிலை இத்தகைய பிரச்சினைகளை மறக்க முயற்சிக்கிறது..

லட்சக்கனக்கில் சம்பாதிக்கும் ஊழியர்கள் கோடிக்கணக்கில் அழுத்தமுடன் இருக்கிறார்கள்…
இதன் அளவின் உச்சத்தில்தான் சிலர் போதும் இந்த அழுத்தம் என்று வெளியேறி தனக்கென்று இருக்கும் சில ஏக்கர் நிலங்களை உழுது பிழைக்கலாம் என்று மாறி விடுகின்றனர்…

வளர்ச்சி என்பது மக்களின் கடினங்களை குறைக்கவே என்றாலும் அதற்கு தேவையான தொழில்நுட்பமும் முதலாளிகளின் பைகளை நிரப்பவே பயன்படுகிறது…
இந்த நிகழ்வுகளை முறைப்படுத்தி மக்களை கடினமான காலத்தில் காப்பாற்ற கடமை உள்ள அரசுகளோ வரியை மட்டும் நிரப்பிகு்கொண்டு தமக்கான பொருப்புகளை தட்டிக்கழிக்கின்றன….

எல்லாம் உணர்ந்த பின்னே கடைசியில் தன்னுடைய நிலையிலாமையை உணர்ந்து வருந்தும் மனம் பாவம்…

இப்படிக்கு….

திரு.வழியிலான்
(அகர முதல எழுத்தெலாம் ஆதி பகலவன் முதற்றே உலகு)

உண்மை கதாநாயகன்கள்

1985 முதல் இன்று வரையிலான தமிழ் படங்களில்   கதாநாயகன்களின் யோக்கியதைகளையும் அதற்கு காரணமான விடயங்களையும் சற்றே அலசுவோம்.

மேலும் இன்றைய தமிழ் இளைஞர்கள் எவ்வாறு வலுக்கட்டாயமாக தேவையில்லா மூலைச்சலவைக்கு ஆளாகிறார்கள் அதன் பயனாக எவ்வாறு தங்கள் கைகளாளேயே தங்களின் எதிர்காலம் என்கிற கண்களை குத்திக் கொள்கிறார்கள் என்பதையும் அலசுவோம்.

பல தந்தைமார்கள் கடினமாக உழைத்து தனது பிள்ளைகளை யாதொரு கடினமும் அடையாமல் தங்கள் பிள்ளைகளை வளர்க்கின்றனர் ஆனால் இதனாலயே தானாக சிந்தித்து முடிவெடடுக்கும் பழக்கம் இல்லாமலேயே வளர்ந்து விடுகின்றனர்.

இதன் காரணமாக தனக்கு இவை இவை தேவை, தேவையில்லை என்பதை பற்றிய சிந்தனையே இல்லாது பெற்றோரரின் கைப்பாவைகளாக மாறிவிடுகிறார்கள்.

இதன் பின்னர் தனது படிப்பு ,உடை,நன்பர்,பொருள்கள் இவையனைத்தையும் விளம்பரதாரர்களும்,கதா பாத்திரங்களும் தீர்மானிக்கும்படி ஆகிவிடுகின்றனர்.

படத்தில் கதாநாயகன் ஒரு குறிப்பிட்ட படிப்பை படித்தால் தானும் படிக்க முடிவெடுக்கும் பித்துக்குளிகளாகவும் குருடர்களாகவும் மாறிவிடுகின்றனர்.

சரி இங்கு படிப்பை தேர்ந்தெடுக்கத்தான் தூன்டிவிட்டார்கள் என்றால் அத்தோடு விட்டு விடுகிறார்களா எனில் இன்னும் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று பார்க்கலாம்..

படிக்கும் வளாகத்தில் உலாவ புகைவன்டியை வாங்கித்தர தந்தையை வருமானத்தை மீறி வற்புறுத்துவதில் தொடங்கி கைக்கடிகாரம்,அமெரிக்க வகை ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த கைப்பேசி என இந்த பட்டியல் மிக நீளமானது..

இப்படி மறைமுகமாக வனிக நிறுவனங்களிடம் மாட்டி சீரளிகிறார்கள்..

இவர்கள் வாங்கும் பொருள்களின் மூலமாக  இத்தகையவர்களை மறைமுக விளம்பரதாரர்களாக பழக்கி தன்னை சுற்றி உள்ளவர்களையும் அதை வாங்க தூன்டுகிறார்கள் அல்லது பொருள் சார் தாழ்வுமனப்பான்மையை தன்னை சுற்றியுள்ள மாணாக்கரிடம் விதைக்கிறார்கள்..

மேலும் கல்லூரியில் தங்களுக்கு பாடங்களை சொல்லித்தர வரும் ஆசிரியர்களை சில படங்களில் மிகவும் மோசமான முறையில் சித்தரித்து அவர்களை வழிகாட்டியாக நினையாது அவர்களை மிகவும் மொக்கையான ஒரு  குனகமாக நினைக்கவைத்து..
கல்லூரிக்கு செல்வதே அவர்களை பழிக்கவும் மற்றும் ஏமாற்றவும் என நினைக்க சொல்லுகின்றனர்..

இப்படி கல்லூரிக்காலத்தில் முக்கால்வாசி பங்கை கல்லூரியிலேயே பலவற்றிலும் கழிக்கும் நமது தமிழ் இளைஞர்கள் பலர் கல்லூரி பருவத்தை சாதனைகளின் இனிமையான காலமாக மாற்றாமல் பல பாடங்களில் தோல்வியுற்று முடிக்க முடியாமல் வருந்தி தன்னையும் தன்னை சார்ந்த குடும்பத்தையும் கஷ்டப்படுத்துகின்றனர்..
காலம் போனதும் தான் புரிகிறது இவையெல்லாம் தன்னை பாழாக்கிவிட என பின்னப்பட்ட மேல்தட்டு வர்க்கத்தின் வலைகள் என்று.

வாழ்வியல் உதாரனம் மற்றும் கதாநாயகன் வீரன், தலைவர் போன்ற வார்த்தைகள் உண்மையில் நம்மை இந்த சமுதாயத்தில் அடிநிலை நடுநிலை மேல்நிலை என்ற வர்க்கத்தை ஏற்றுக்கொள்ளவே வலுக்கட்டாயமாக தினிக்கப்படுகிறது.

குறைந்தபடசமாக
உண்மையில் மானவர்களுக்கு வாழ்வியல் உதாரனமாக இருக்க வேண்டிய கதாநாயகர்கள் அவர்களின் ஆசிரியர்களே…(அதனாலோ  என்னவோ கதாநாயகனை வளர்க்க ஆசிரியர்களை படங்களில் மொக்கையாகவும் ,கையாளாகாதவர்களாகவும் வடிவமைக்கிறார்களோ)

தமிழ் மானவர்கள் முதலில் உணர வேண்டியது “முன்னாளில் தன்னை போன்ற ஒரு மானவனே இந்நாளைய ஆசிரியர்…
ஒரு வகையில் முதிர்ந்த மாணாக்கர்”.

அதை போன்று சுமார் 30 வருடங்களுக்கு முன் தமிழகத்தில் அதிகம் தொழில் சார்ந்து இயங்கவில்லை எனவே அக்காலத்தைய படித்த இளைஞர்கள் பலர் கணக்கு வழக்குகளை பார்ப்பதற்கு உதவும் வகையில் பொருளாதாரம் மற்றும் வனிகம் ஆகியவைகளை மட்டும் பெருவாரியாக படித்தனர்.
அவர்களால் பெரிய அளவில் தனித்தியங்க வாய்ப்புகள், இன்று இருப்பதை போல் இல்லை, மேலும் அலுவலகத்தில் அத்தகைய பணிகளை பார்க்கும் வேலை ஆட்களின் எண்ணிக்கை குறைவு (தகுதியான வேலையும் அரிதாகவே கிடைத்தது)அதனால் படித்த இளைஞர்கள் பலரே படிப்பை ஒரு பொருட்டாக நினைக்காமல் இருந்தனர்…

இன்றோ பொறியியல்  கணிணி , ஊக  வனிகம் , ஊக வர்த்தகம்  மின்னனுவியல் என படிப்புகள் அதிகம்…இன்று ஒவ்வொரு மானவனும் இத்தகைய படிப்புகளை படிப்பதோடு மட்டுமில்லாமல் சமூகத்திற்கு பயன் தர தக்க சாதனங்களையும் முறைகளையும் தயாரிக்கலாம்..இப்படியாக மட்டுமே உழைப்பு என்ற உடல் சார் தினிப்பில் இருந்து விடுபட்டு அறிவுசார் சமூகமாக வாய்ப்பு அனைவருக்கும் கிட்ட இயலும்.

ஒவ்வொரு மானவனும்
நன்றாக கவனித்தால் படங்களில் நடிக்கும் நடிகர்கள் நடுத்தர வர்க்க பொருள்களையே பயன்படுத்துவர் ஏனெனில் அப்பொழுதுதான் இவர்கள் அப்பொருள்களுக்கு விற்பனை முகமாக மாறி நடுத்தர வர்க்கத்தை விட மேலாக வாழ இயலும்.
இந்த அடிப்படையில் தரம் பிரித்தோமேயானால் இன்று நாட்டை திருத்துகிறேன்,அவனை திருத்துகிறேன் மற்றும் இவனை திருத்துகிறேன் என வெற்றுரை கூறும் (நடிகர்) மாந்தர் பலர் விளம்பரம் என்று வரும்பொழுது அதைவிட அக்கரையை விளம்பரதாரரின் வாய்ப்பிற்கும் பனத்திற்கும் தருவதையும் கானலாம்…
ஏனெனில் இவர்கள்தான் தொழிலை மேலும் அரசியல் வரை விரிவாக்கி கொள்கையற்ற கோமாளிகள் ஆதிக்கம் பெற வழிவகுக்கிறார்கள்…
ஆசிரியர்களும் தங்கள் வேலையை சமூக தொன்டாக கருதி இயங்க வேண்டும் மற்றும் தங்களை மனிதர்கள் என்ற விலங்குகளை சிந்திக்க தூண்டும் வினையூக்கிகளாக நினைத்து ஆசிரியர் வேலையை நினைத்தல் வேண்டும்…
ஒரு தெரியாத ஆசிரியரால் 60 சிந்திக்காத மாணவர்கள் உருவாகிறார்கள் அவர்களில் பலரே வாழ வழியின்றி ஆசிரியராகின்றனர் பின்னர் இவர்கள் 3600 மாக்கள் உருவாக காரணமாகின்றனர்…
இப்படி ஆசிரியர் மற்றும் அவரின் குனநலன்கள் எப்படி ஒரு பரந்துபட்ட கூட்டத்தின் வாழ்வியலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்து அனைவரும் செயலாற்ற வேண்டும்….

நமது மக்கள் ஒப்பனை தொழிழாளர்களை சாதனையாளர்களாக நினைத்து ஏமாறுகிறார்கள்…

ஏற்கனவே சாதிய மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளில் சிக்கித்தவிக்கும் இன்றைய தலைமுறையின் குடும்பங்களில் இருந்து வரும் மாணாக்கர்களுக்கு படிப்பு என்பதே ஒரு அரிய வாய்ப்பே இதை புரிந்து கொள்ளாமல் வீனடிக்கப்படுகின்றனர்….

அது இனியேனும் மாற்றம் பெறட்டும்….

___________________________________
திரு.சோழநாடன்