தமிழ் இணையதளம் 1

அப்படி இப்படின்னு ஒரு வலை பூவை தமிழில் உருவாக்கலாம் என்றால் அதற்குல் போதும் போதும் என்றாகி விட்டது.

ஆங்கிலம் தவிற மற்ற மொழிகளில் வலைப்பூவை ஆரம்பிக்க போதிய வழிகாட்டுதல் இல்லை இதை தவிற தமிழில் வலைப்பூ உருவாக்க சில தடைகளை இயற்கையாக உள்ளன.

மேலும் அதிக அளவில் உள்ள IT துறை பொறியாளர்களோ அல்லது கணிணி சார்ந்த பொறியாளர்களோ அதிக அளவில் தமிழ் வலைப்பூ உருவாக்கல் குறித்து எழுதி இருப்பார்கள் என்று தேடி பார்த்தால்அப்படி ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை.

image

நான் கண்டறிந்த தீர்வுகள்.

….தமிழ் வலை பாமரனுக்குமே…

தீர்வுகள்

வசவர்

சமூகத்தற்கு தேவையான கருத்துகளை கொன்டதோடுமட்டும் அல்லாது அதனை கட்டமைக்கும் பெரியோர் அனைவரும் வசவர்களஆகவே இருப்பர்.

எல்லோரும் நியூட்டனின் புவி ஈர்ப்பு கொள்கைகளை நம்பியே இருந்த போது அதற்கு முற்றிலும் மாறான கால வெளி வளைவை குறித்து ஆராய்ந்ததாலேயே ஐன்ச்டீனுக்கு சார்பியல் கொள்கைகள் கிடைத்தன.

எங்கும் எதையும் எதிர்க்கும்,சிந்திக்கும் ஒரு தலைமுறை இன்று தேவை.

தமிழ் சார்

தமிழில் அனைத்து பாடங்களும் கற்பித்து தமிழிலேயே நம் தமிழ்நாட்டு மானாக்கர் சிந்தித்து தமிழிலேயே அனைத்து துறைகளும் வளர்வதை கானும் கொடுப்பினை இனி நமக்கு வாய்க்காதோ.

தமிழில்தான் திரு.மயில்சாமி அன்னாதுறை அவர்கள் படித்து இன்று நிலவில் நீரை கண்டார்.
திரு.அப்துல கலாம் அவர்கள் பல நவீன ஏவுகனைகளை உருவாக்கினார்.

இப்படி எத்துனை முறை தமிழர்கள் தத்தம் திறமைகளை நிருவினாலும் அவர்களின் மொழி மட்டும் ஏனோ அங்கீகரிக்கப்படுவதில்லை.

பொறியாலர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும்,பேராசிரியர்களுக்கும் அடிப்படை வகுப்பு பயிலும் நமது பள்ளி மானாக்கருக்குமான இடைவெளியே தமிழில் படிக்கும் மனப்பான்மை குறைய காரனமாகிறது.

எனவே இன்றைய பொறியியல் ,மறுத்துவம் சார்ந்த மற்றும் பல்துறை பேராசிரியர் பெருமக்கள் தத்தமது பிள்ளைகளை தமிழ்வழி கல்வி கற்க அரசு பள்ளிகளில் மட்டுமே சேர்ப்பேன் என்ற உரிமை கொள்ள வேண்டும்.

இன்று இதை செய்ய மறப்போமாகில் நம் பிள்ளைகளை நாமே விசம் கொடுக்க துணிந்தவராவோம்.

___திரு.அஆஇஈ

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

அறிவியல் மற்றும் தொழில்நுடபம் மட்டுமே மக்களை காப்பாற்ற இயலும் ஆனால் அதற்காக மக்கள் கொடுக்க வேண்டிய விலைதான் அதிகம்.

இதற்கு இடையில் தான் அரசியல் நாடகங்கள் வியாபார கொள்ளைகள் நடக்கின்றன.

இதை ஏற்று கொள்ள செய்யவே அரசாங்க அமைப்புகளும் உள்ளன.

இதில் உள்ள வகைப்பாடு தான் ஜனநாயகம் சமதர்ம கொள்கைகளும் உருவாகின்றன.

இதை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்கிறோர்களோ இல்லையோ அமைதி கருதி மௌனிக்கிறார்கள்.

சமதர்ம (socialism) கொள்கைகளை அறிவியலோடு ஒருங்கினைக்கும் ஒரு சமுதாய கட்டமைப்பு இன்று தேவை.

அதற்கான விடிவைதான் பல ஆண்டுகளாக சமதர்மவாதிகள் தேடுகிறார்கள்.

இதற்கு இடைப்பட்ட வெளியில்தான் முதலாளித்துவம் தன்னை நிலை நிறுத்த முற்படுகிறது.

எல்லாவற்றிலும் பொருளாதார நோக்கமா என்ற வினா “ஆம்” என்கிற உண்மையை நாம் அறிவதில் இருந்து நம்மை தவிர்க்கிறது.

-அவளன்